June 11, 2023
செல்வம்

வாஸ்துப்படி 2023-ஆம் ஆண்டு காலண்டரை வீட்டின் எந்த திசையில் தொங்க விட வேண்டும் என்று தெரியுமா உங்களுக்கு…!?

2022-ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. நாம் அனைவரும் புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

புத்தாண்டு வந்தாலே முதலில் நாம் செய்வது, புதிய காலண்டரை வீட்டில் தொங்கவிடுவோம். காலண்டரானது ஒருவர் நாளுக்கு நாள் முன்னேறி செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலான ஒரு பொருள்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த காலெண்டரை நாம் சரியான திசையில் தொங்க விட வேண்டும். ஏனெனில் காலெண்டர் இருக்கும் இடம் மற்றும் திசையும் ஒருவரின் வீட்டில் மற்றும் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி புத்தாண்டு காலண்டரை சரியான திசையில் மாட்டும் போது அது நமக்கு நல்ல பலனையும், நல்ல அதிர்ஷ்டத்தை தருவதோடு மட்டுமில்லாமல், குறிப்பிட்ட ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்னைகளையும் தடுக்கும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் நாட்காட்டியை எங்கு, எப்படி மாட்டுவது மற்றும் அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன என்பது குறித்து நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

சில காரணங்களால் பலரும் நம்முடைய வீடுகளில் பழைய காலண்டர்களை மாட்டி வைத்திருப்போம். பழைய நாட்காட்டியை அப்படி மாட்டி வைத்திருப்பது அபசகுணமாகும். வாஸ்து படி அப்படி செய்வது நல்லது கிடையாது. அது வாழ்க்கையில் முன்னேற்ற வாய்ப்புகளை குறைக்கிறது.

வாஸ்து படி, 2023 புத்தாண்டு காலண்டரை வீட்டின் வடக்கு, மேற்கு அல்லது கிழக்கு சுவரில் வைப்பது எப்போதும் சரியானதாக கருதப்படுகிறது. புத்தாண்டு நாட்காட்டியை வீடு, அலுவலகம் அல்லது கடை போன்ற இடங்களில் மாட்டி வைப்பது முன்னேற்றத்தை காட்டும். நாட்காட்டியை தெற்கு திசையில் வைக்கக் கூடாது, இதைச் செய்வதன் மூலம், ஆரோக்கியம் நன்றாக இருக்காது மற்றும் முன்னேற்றம் தடைபடும்.

வீட்டில் செல்வம் பெருகுவதற்கு காலண்டரை கிழக்கு திசைகளில் தொங்க விடுவது நல்லதாக கருதப்படுகிறது. இந்த திசையில் காலண்டரை தொங்கவிடும் போது, அந்த வீட்டில் உள்ளோருக்கு சூரிய பகவனின் குணாதியங்கள் இருக்கும்.

உங்கள் வேலைகள் சிறப்பாக நடைபெற வேண்டுமானால், காலண்டரை மேற்கு திசையில் வையுங்கள். இதனால் வேலை சுமூகமாக நடப்பதோடு, உங்களின் வேலையும் வேகமடையும் மற்றும் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றம் ஏற்படும்.

வடக்கு திசை குபேர திசையாக கருதப்படுகிறது. இந்த வடக்கு திசையில் காலண்டரை தொங்கவிடுவதால் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் வாழ்வில் திருப்திகரமான உணர்வைத் தரும்.

சூரியன் உதிக்கும் கிழக்கு திசையில் சூரியனின் படத்துடன் கூடிய நாட்காட்டியை வைத்துக் கொண்டால் அதன்மூலம் நல்ல வாய்ப்புகள் ஏற்படும். கிழக்கு பகுதியில் மாட்டப்படும் நாட்காட்டி குழந்தையின் வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான கதவுகளைத் திறக்கிறது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

2023-ஆம் ஆண்டு புத்தாண்டு காலண்டர் எப்படி இருக்கலாம்?

ஒரு காலண்டர் பக்கம் எப்போதும் உதய சூரியன் அல்லது மகிழ்ச்சியை குறிக்கும் படங்கள் இருக்க வேண்டும். கொடூரமான விலங்குகளின் படங்கள், மகிழ்ச்சியற்ற முகங்கள் போன்றவற்றைக் கொண்ட நாட்காட்டியை ஒருபோதும் மாட்டாதீர்கள். அது வீட்டிற்கு எதிர்மறை சக்தியைக் கொண்டுவருகிறது.

புத்தாண்டு காலண்டர் பச்சை, நீலம், வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும். அத்தகைய வண்ண காலண்டர்களை வைப்பது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது.

Related posts

Leave a Comment