January 31, 2023
தகவல்

தங்கத்தை “பிங்க் பேப்பரில்” பொதிந்து கொடுப்பார்கள் ஏன் தெரியுமா?

தங்க ஆபரணம் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒரு பொருளாகும். குறிப்பாக தங்க ஆபரணத்தை பெண்கள் தான் மிகவும் விரும்புவார்கள். இந்த தங்கத்தை நாம் வாங்கும் போது, நாம் வாங்கக்கூடியது சிறியதாக இருந்தாலும் சரி, பெரிய பொருளாக இருந்தாலும் சரி அதை இளஞ்சிவப்பு நிற அதாவது பிங்க் கலர் தாளில் தான் நகைக்கடையிலிருந்து பொதிந்து கொடுப்பார்கள். அப்படி பொதிந்து கொடுக்க காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள கீழே படியுங்கள்.

புதிதாக செய்த தங்கம் மஞ்சள் நிற பொலிவுடன் இருக்கும். அதை இளஞ்சிவப்பு நிற தாளில் பொதிந்து வைக்கும் பொழுது, தங்கத்தின் அடர் மஞ்சள் நிறமும், பேப்பரின் இளஞ்சிவப்பு நிறத்தின் பிரதிபலிப்பும், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நம் கண்ணை கவரும். அதற்காகத்தான் இந்த பிங்க் தாளில் பொதிந்து கொடுப்பார்கள்.

சில நேரங்களில் தங்கம் கறுத்துப் போனதை நாம் பார்த்திருப்போம். அதற்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்களா? தங்கத்தை ஓட்ட பயன்படுத்தும் பொடி அளவுக்கு அதிகமாக சேர்ப்பதால் தான் தங்கம் கறுத்து போகிறது. .

இது வெள்ளி மற்றும் செம்பை சேர்த்து தங்கத்தின் சதவிகிதத்தை குறைக்கும். இது அதிகமாகும் போதுதான் நாம் ஏமாற்றப்படுகிறோம். இதற்கு மாற்றாக காட்மியம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இது தங்கம் செய்பவரின் நுரையீரலை பாதிக்கிறது.

இதற்கும் மாற்றாக துத்தநாகம் மற்றும் இண்டியம் பயன்படுத்தப்பட்டது. இதனை சொக்கத்தங்கத்தில் ஓட்டுதல் செய்தால் மட்டுமே bis ஹால்மார்க் கிடைக்கும். நாம் வாங்கக்கூடிய தங்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் விற்ற விலை இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை.

தங்கத்தை 22 கேரட், 24 கேரட் என்றெல்லாம் கடைகளில் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதில் 24 கேரட் என்பது மிகவும் சுத்தமான தங்கம். இதற்கு வளைந்து கொடுக்கும் தன்மை இருக்காது. இதனால் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்ப்பவர்கள் தான் வைத்திருப்பார்கள். மற்றபடி ஆபரணங்கள் செய்ய 22 கேரட்டைதான் பயன்படுத்துகிறார்கள்.

தங்கம் வாங்க ஏற்ற நாள் (அட்சயதிருதி)

ஆண்டுக்கு ஒருமுறை வரும் அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்க ஏற்ற நாள் என கூறப்படுகிறது. அன்றைய தினம் அரிசி அன்னதானம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். இந்த அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் சேரும்.

சேதாரம், செய்கூலி

நாம் தங்க நகை வாங்கும் பொழுது, அதில் சேதாரம் என்றும் செயக்கூலி என்றும் ஒரு தொகையைப் பிடித்தம் செய்வார்கள். இரண்டு பவுனில் ஒரு நகையை செய்ய வேண்டுமென்றால் அதற்கு சிறிது கூடுதலான அளவு தங்கத்தை எடுத்துக் கொண்டால் மட்டுமே இரண்டு பவுனில் ஆபரணத்தை உருவாக்க முடியும். வாடிக்கையாளர் குறிப்பிட்ட வடிவத்தில் நகை செய்யும்போது சிறிது நகை இழப்பு ஏற்படும்.

இந்த இழப்புக்காக நம்மிடம் வசூலிக்கப்படும் தொகையே சேதாரம். ஒரு பவுனுக்கு ஒரு கிராம் என்பதே நியாயமான சேதாரம். அதற்கும் குறைவாக சேதாரம் வசூலித்தால் நம் தங்கத்தின் தரமும் குறையும் அபாயம் இருக்கிறது. அன்றைய காலத்திலிருந்தே தங்க நகை வேலை செய்தவர்களுக்கு போக்குவரத்து செலவாக வழங்கப்பட்ட தொகைதான் செய்கூலி.

தங்கத்தின் தரம் பாதுகாக்க

தங்க ஆபரணங்களின் மீது தொடர்ந்து ‘செண்ட் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள்’ படவே கூடாது. ஏனெனில் இது தங்கத்தின் பணப்பை பாதிக்கும். இதேபோன்று நம் கழுத்து, கைகளில் அணியும் தங்க நகைகளோடு வெள்ளி மற்றும் கவரிங் நகைகளை சேர்த்து அணிவதை தவிர்ப்பதன் மூலம் தங்கத்தின் தரத்தை பாதுகாக்கலாம்.

வெள்ளி மற்றும் கவரிங் அணிகலன்களோடு தங்கம் ஏன் உரசகூடாது. அது ஏன் தெரியுமா? பொதுவாக தங்க ஆபரணம் வேறு ஏதேனும் ஒரு பொருளுடன் அதிகமாக உராயும்போது ஏற்படும் இழப்பே தேய்மானம் எனப்படுகிறது. இதனால் ஆபரணம் உராய்வதை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும். நீங்கள் தங்க ஆபரணத்தை அதிகம் பயன்படுத்துபவர்களாக இருந்தால், அதை கவனமாக, பாதுகாப்பான முறையிலும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Related posts

Leave a Comment