நாம் தினமும் உபயோகப்படுத்தும் டாய்லெட் சுத்தமாக இருப்பது தான் அனைவருக்கும் பிடிக்கும். சில நேரங்களில் டாய்லெட்களில் படிந்துள்ள அழுக்குகளை போக்க முடியாது என்று நாம் வருத்த படுகிறோம். ஆனால் அழுக்கு படிந்துள்ள இடங்களை பளிச்சென்று மாற்ற முடியும். அப்படி அழுக்கு படிந்துள்ள இடங்களை சுத்தம் செய்யவும், பாத்ரூமை சுத்தமாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.
ஒருவேளை நீங்கள் உங்கள் கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களை அறியாமலே பல நுண்ணிய கிருமிகள், பாக்டீரியாக்கள் உங்களை தாக்கி கொண்டிருக்கின்றன. அவை டாய்லெட் பிரஷ்ஷில், கழிப்பறை விளிம்பிற்கு கீழ் , கழிப்பறைக்கு பின் மற்றும் கழிப்பறை இருக்கை மீது படிந்திருக்கலாம். நீங்கள் சுத்தம் செய்ததாக நினைத்த கழிப்பறையில் அதிக அளவில் மாசுக்களும் கிருமிகளும் இருக்கின்றன.
குளியலறை, கழிப்பறையை விட டாய்லெட் பிரஷ்ஷில் தான் அதிக கிருமிகள் இருக்கிறது. சிலர் கழிப்பறையை சுத்தம் செய்வதில் காட்டும் அக்கரையை பிரஷை கழுவுவதில் காட்டுவதில்லை இதன் பலனாக பிரஷ்ஷில் உள்ள நுண்ணுயிரிகள் இனப்பெருக்கம் செய்து எல்லா வகை பாக்டீரியா தொற்றுக்களையும் உருவாக்குகிறது.
இதை ஒழிக்க உங்கள் கழிப்பறையை சுத்தம் செய்த பின் டாய்லெட் கிளீனிங் ப்ரஷையும் கிருமிநாசினி அல்லது ப்ளீச்சிங் திரவத்தில் ஒரு இரவு ஊறவைத்து நன்கு கழுவவும். இப்போது நீங்கள் மிகச்சுத்தமான கிளீனிங் பிரஷை பெற்றுவிட்டீர்கள். இதைக்கொண்டு நீங்கள் அடுத்த முறை உங்கள் கழிப்பறையை இன்னும் அழகாக சுத்தம் செய்யலாம்.
கழிவறைக்கு பின்னாலும் சுவர்பகுதியையும் சுத்தம் செய்ய துடைப்பானுக்கு பதிலாக நீங்கள் கிருமிநாசினி தெளிப்பை உபயோகித்தால் எளிதில் கழுவலாம்.
கிருமிநாசினி(disinfectant)
சில கண்ணனுக்கு தெரியாதா கிருமி நாசினி உங்கள் டாய்லெட் -ல் படிந்திருக்கும். அதை போக்க இரவு நேரத்தில் கிருமிநாசினி ஸ்பிரேயை தெளித்து விட்டு காலையில் கழுவவும். அப்பொழுது அங்கு தங்கி இருக்கும் அத்தனை கிருமிகளும் அழிந்து விடும்.
மேலும் துடைப்பானை க்ளெனிங் சொலுஷனில் அல்லது கிருமிநாசினியில் ஊறவைத்து, துடைப்பனின் ஒரு பகுதியை கையில் பிடித்துக்கொண்டு, அதை கழிவறையை சுற்றி விரித்து விடவும், பின்னர் அதை நன்கு துவைத்து சுத்தப்படுத்தவும். கழிப்பறை மிகச்சுத்தமாக பளபளக்கும்.
கழிப்பறை விளிம்புகள் சரிவர சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் அது பாக்டீரியாக்களையும் கிருமிகளையும் இனப்பெருக்கம் செய்து விடும் மேலும் அது மிக மிக ஆபத்தானதாகி விடும். ஆகவே கழிப்பறை விளிம்புகளை நன்கு சுத்தம் செய்யுங்கள்.
பிரஷ்
உங்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய அதற்கேற்ற பிரஷ்-யை முதலில் தேர்வு செய்யுங்கள். மிக கடினமான வேலை என்பதால் கைகளுக்கு பாதுகாப்பு உறை போட்டு விட்டு விளிம்புகளில் சுத்தத்திற்கு அதிக கவனம் செலுத்துங்கள்.
பாத்ரூமில் ரேக்
கழிவறையில் எப்போதும் நறுமணம் தரும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது. கழிவறையில் பயன்படுத்தும் சோப் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை அங்கேயே ஒரு ரேக் தயார் செய்து வைப்பது நல்லது. மேலும் கழிவறையில் பயன்படுத்தும் பொருட்களை வெளியே கொண்டு வராதீர்கள்.
வெள்ளை வினிகர்
சானிடரி வேர் (sanitary ware) மீது எந்த வித கடின நீரும் தேங்காமல் இருக்க உங்கள் ஃப்ளஷ் டேங்கில் (flush tank) வெள்ளை வினிகரை ஊற்றுங்கள். ஒவ்வொரு ஃப்ளஷின் போதும் புதிய வாசனை வருவதோடில்லாமல் இது உங்களை கிருமியிலிருந்து விலக்கி பாதுகாக்கிறது. மேலும் இது 100% நச்சுத்தன்மையற்றது.
ஃப்ளஷ்
ஃப்ளஷ் டேங்க்கை சுத்தமாக வைக்க வேண்டும். ஏனெனில் உங்கள் கழிப்பறை சிறு மலத்துகள்களை நீங்கள் ஒவ்வொரு முறை ஃப்ளஷ் செய்யும்போதும் ஸ்பிரே செய்கிறது. அந்த மலத்துகள்கள் டூத் பிரஷ்களில் தங்கியிருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தது உள்ளனர். ஆகவே கழிவுகள் சரியாக நீக்கப்படும் அளவிற்கு ஃப்ளஷ் செய்யுங்கள். அதனால் உங்கள் கழிப்பறையை இன்றே சுத்தம் செய்து விடுங்கள்.
ஷவர்
நீங்கள் உங்கள் கழிவறையில் ஷவர் பயன்படுத்துவீர்களானால் அங்கு ஜன்னல் மற்றும் கதவுகளில் போட பட்டுள்ள கர்ட்டைன் துணிகளை துவைப்பது கிருமிகள் தொற்றை தடுக்கும்.
ஈரமான துணிகள்
நீங்கள் உங்கள் கழிவறையில் ஈரமான துணிகளை போட வேண்டாம். அது கெட்ட வாடையை பரப்புவதுடன் கிருமிகள் தங்க வழிவகுக்கும்.