January 31, 2023
உடல்நலம்

புத்தாண்டு முதல் உங்கள் உடல் எடையை குறைக்க விருப்மா? அப்படினா இந்த விதையை இப்படி பயன்படுத்தி பாருங்கள்…!

வரும் புத்தாண்டையொட்டி பலரும் பலவிதமான கனவுகளுடன் எதிர்பார்ப்புகளுடன் புதிய தீர்மானங்களுடனும் இருப்பீர்கள்.

இவர்களுக்கு மத்தியில் உடல் பருமானால் அவதி அடைந்து, அதை குறைக்க முயற்சிப்பவர்களும் உண்டு. அப்படிப்பட்ட வர்களுக்கு புத்தாண்டு முதல் உங்கள் உடல் எடையை குறைக்க ஒரு சிறப்பு பானம் பற்றிதான் நாம் இந்தப் பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

இது தொப்பை கொழுப்பை விரைவில் குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இது தொப்பையை கரைத்து இடுப்பை மெலிதாக மாற்றிவிடும். அந்த விதையின் பெயர்தான் “சியா ஸீட்ஸ்” என்றழைக்கப்படும் “சியா விதைகள்”.

சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பானம் கொழுப்பை குறைப்பதற்கான முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைச் செய்ய, உங்களுக்கு நாற்பது கிராம் சியா விதைகள் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் தேவை. மேலும் இதன் சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாற்றையும் வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

தண்ணீரில் சியா விதைகளை கலக்கி வைத்து குறைந்தது இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றில் சியா விதைகள் ஊறினால் மேலும் ஊட்டச்சத்து அதிகரிக்கும். இந்த எடையைக் குறைக்கும் பானத்தை காலையில் குடிப்பது மிகவும் நன்மை தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சியா விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்வீர்கள்.

நீங்கள் குறைவான கலோரிகளை சாப்பிடும்போது, ​​உடல் கலோரி பற்றாக்குறைக்கு செல்கிறது. இது அடிவயிற்றில் அல்லது உடலின் மற்ற பகுதிகளில் சேமிக்கப்படும் கொழுப்பை எரிப்பதன் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

மேலும், சியா விதைகளை ஸ்மூத்திகள், சாலடுகள், தயிர் வகைகள் மற்றும் சூப்கள் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.

சியா விதைகளை எடை குறைக்கும் உணவில் சேர்ப்பது மிகவும் எளிதானது மற்றும் பயனுள்ளது. இந்த முறைகளை பயன்படுத்தி வருகின்ற புத்தாண்டு முதல் உங்கள் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துகின்றோம் “ஸியோ தமிழ்” சார்பாக.

Related posts

Leave a Comment