September 28, 2022
டிப்ஸ்

இரண்டு ரூபாய் செலவில் உங்கள் வீட்டு ரோஜா செடி கொத்துக் கொத்தாக பூத்து குலுங்க வேண்டுமா ?

வீட்டில் செடி வளர்ப்பவர்களில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி வளர்ப்பது ரோஜா செடி ஆகும். இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவலாக மக்கள் விரும்பி வளர்க்கும் செடியாக ரோஜா காணப்படுகிறது.

அனைவராலும் விரும்பி வளர்க்கப்படும் இந்த ரோஜா செடியை கண்ணால் பார்த்தாலே மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. ரோஜா செடிக்கு எளிமையான பராமரிப்பு கொடுத்து வந்தாலே அது நிறைய பூக்களை கொடுக்கும்.

ரோஜா செடியில் இருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கப்படும் இந்த ஒரு பொருளே அற்புதமான தீர்வை கொடுக்கும். அது என்ன பொருள் ? அதை எப்படி பயன்படுத்த வேண்டும் ? என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்…

ரோஜா செடி எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என்பது அவசியம். அது மட்டுமில்லாமல் ரோஜா செடியில் இருக்கும் மண் ஆனது தளர்வாக இருக்க வேண்டும்.

மிகவும் இறுக்கமாக இருந்தால், அதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் அது வாட துவங்கும். மண்ணில் இருந்து கிடைக்கக்கூடிய ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதம் கொடுக்கக்கூடிய உரங்கள் இவை அனைத்துமே ஒரு ரோஜா செடியை நன்கு பூக்க செய்கிறது.

ரோஜா செடிக்கு தேவையான சத்துக்கள் முட்டையின் ஓட்டிலும், தேயிலை தூளிலும் அதிகமாக காணப்படுகிறது. அதனால் ரோஜா செடி வளர்ப்பவர்கள் பெரும்பாலும் இந்த இரண்டு உரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அது மட்டும் அல்லாமல் காய்கறி மற்றும் பழக்கழிவுகளும் பயன்படுத்தப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஒரு பொருளும் ரோஜா செடிகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அதிகமாக கொண்டுள்ளது.

அதுதான் நம் அனைவருக்கும் எளிதாக கிடைக்க கூடிய இரண்டு ரூபாய் காபி தூள்தான் அது. தேயிலை தூளை போலவே காபி தூளில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், அயன், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.

இதை முறையாக நீங்கள் இருபது நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உங்களுடைய செடிகளுக்கு கொடுத்து வந்து பாருங்கள், இலை உதிர்தல் பிரச்சனை, செடி வாடி போவது, ஒரு கிளையில் ஓரிரு மலர்கள் மலர்வது போன்ற பிரச்சனைகள் மற்றும் மலரின் நிறம் மங்குவது, ரோஜா பூ பெரியதாக பூக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளும் இவற்றின் மூலம் நீங்கும்.

பத்து ரோஜா செடிக்கு குறைவாக வைத்திருப்பவர்கள் இரண்டு ரூபாய் காபி தூள் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை ஒரு லிட்டர் அளவிற்கு அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.

சாப்பாட்டிற்கு ஊற வைத்த அரிசியில் இருந்து கிடைக்கக் கூடிய தண்ணீர் ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டு அதில் இதை கலந்து பின்னர் பத்து லிட்டர் அளவிற்கு சாதாரண தண்ணீரில் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரைத் தான் நீங்கள் ரோஜா செடிகளுக்கு ஸ்ப்ரே செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் செடி முழுவதும் தண்ணீர் எப்பொழுதும் ஊற்றுவது போல ஊற்றி விட வேண்டும்.

ஈரப்பதத்தை எப்பொழுதும் தக்கவைத்துக் கொண்டிருந்தால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் முழுமையாக ரோஜா செடிக்கு சென்றடையும். இதை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாதம் இருமுறை இதை செய்யுங்கள்.

பூச்சி தாக்குதல்கள் இல்லாமல், ரோஜா செடியின் இலைகள், மொட்டுக்கள், பூக்கள், கிளைகள் என்று எல்லாவற்றிலும் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு நிறைய பூக்களை, பெரிது பெரிதாக நல்ல அடர்த்தியான நிறங்களில் பூத்து குலுங்குவதை நீங்கள் பார்க்கலாம்.

Related posts

Leave a Comment