May 30, 2020
அழகு குறிப்புகள்

இந்த பொருள்களை எல்லாம் முகத்திற்கு அழகு செய்ய பயன்படுத்தாதீங்க!!!

அழகு படுத்துவதில் பெண்களுக்கு மாறாக ஆண்களும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்படி அழகு படுத்தும் போது சிலர் கையில் கிடைப்பதை எல்லாம் முகத்தில் போடுகின்றனர். அப்படி நாம் போடும் போது சில சமயங்களில் அவை சருமத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்கிக் விடுகிறது.

சருமத்தில் அதிகப்படியான பிரச்சனைகள் வந்த பிறகு தான் சரும பராமரிப்பு மருத்துவர்களை நோக்கி ஓடுகிறோம். அப்படி எந்த பொருள்களை எல்லாம் முகத்தில் போட கூடாது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆப்பிள் சீடர்

முகத்தின் மினுமினுப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்துகிறோம். முகத்தில் இறந்த செல்களை நீக்க மற்றும் ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தும் சர்க்கரை, பேக்கிங் சோடா இவைகளை எப்போதும் பயன்படுத்த கூடாது.

ஆப்பிள் சீட வினிகரை பயன்படுத்தும் போது மேலாக அதன் நீரை பயன்படுத்தினால் நல்லது. அப்படியே பயன்படுத்தினாலும் கண்களுக்கு அருகில் வாய்ப்பகுதியில், மூக்கு துவாரங்களில் இதை அதிகம் பயன்படுத்தவோ கொண்டு செல்லவோ கூடாது.

அந்த இடங்கள் எல்லாமே மிருதுவானவை. மேலும் இந்த பொருள்களை அடிக்கடி பயன்படுத்தாமல் வாரம் ஒருமுறை மாதம் பயன்படுத்துவது ஆபத்தில்லை.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.  தினமும் இதை பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் ஏற்படும்.

பேஸ் மாஸ்க்

சிலர் அடிக்கடி பேஸ் மாஸ்க் பயன்படுத்துவது உண்டு. இதை அடிக்கடி முகத்துக்கு பயன்படுத்தும் போது சருமத்தின் முதல் அடுக்கில் இருக்கும் தோல்களும் உரிந்து சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். வெயில் காலங்களில் சற்று கூடுதலாக எரிச்சலை உண்டாக்கும்.

எலுமிச்சை சாறு

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நல்லது. ஆனால் அதை அப்படியே பயன்படுத்தாமல் சம அளவு தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு :

இவை எல்லாவற்றையும் விட அழகை பாதிக்காமல் சருமத்தை பாதுகாக்க எண்ணற்ற பொருள்களான காய்கறிகள், பழங்கள், சந்தனம், பாசிப்பயறு, மஞ்சள் போன்றவைகளை அதிகம் பயன்படுத்துங்கள்.

Related posts

Leave a Comment