மரணம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் துன்பத்தைத் தவிர வேறு எதையும் தராது. இது அதிர்ச்சி மற்றும் வலியைத் தரக்கூடிய ஒன்று. இந்த சிந்தனையே உங்களை பயமுறுத்தும். அதைத் தவிர்த்து இறந்தவர்களை நீங்கள் கனவில் காணும் பொழுது அது அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்ல போகிறார்கள் அல்லது உங்களுக்கு வரக்கூடிய ஆபத்துகளை பற்றி எச்சரிக்க போகிறார்கள் என்பதையும் குறிக்கலாம்.
உங்களுடைய கனவில் வரக்கூடிய இறந்த நபர் உங்களுடைய ஆழ்மனதில் ஒரு விஷயத்தைச் சொல்ல முயற்சிக்கிறார். அந்த ரகசியம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். ஒரு சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த கனவுகள் உதவலாம். இறந்து போன ஒருவரை நீங்கள் கனவில் காண்பது உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய புதிய தொடக்கத்தையும் குறிப்பதாக இருக்கலாம்.
அதாவது உங்களுக்கு புதிய ஒரு வாழ்க்கை தொடங்கப் போகிறது என்பதை குறிக்கிறது உங்களுடைய தொழில், வேலை, வாழ்க்கை, காதல், குடும்பம் இதிலெல்லாம் நீங்கள் ஒரு புதிய பரிமாணத்தை பெற்று வாழ்க்கையில் பயணிக்கப்போகிறீர்கள் என்பதை குறிக்கலாம். இறந்தவர்களைப் பற்றி நீங்கள் காணக்கூடிய கனவு உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சில ஆபத்துக்கான எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.
இப்படி வரக்கூடிய சிக்கல்கள் நீங்களாகவே ஏற்படுத்துவதாக இருக்கலாம். அல்லது வேறு ஒருவர் மூலமாகவோ உங்களுக்கு ஏற்படலாம். இறந்தவர்களைப் பற்றி ஒரு சிலர் கனவுகளை காணும் பொழுது அவர்களுக்கும் இறப்பைப் பற்றிய பயம் வருகிறது. இப்படி உங்களுக்கு பயம் வரும் என்றால் நீங்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பிறந்த அனைவரும் இறந்தே ஆக வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த இடைப்பட்ட காலங்களில் நீங்கள் எந்த அளவிற்கு சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பது உங்களுடைய மனதைப் பொறுத்தே அமையும். இறப்பைப் பற்றி நீங்கள் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தால் துக்கமும், சோகமும் மட்டுமே உங்களை சுற்றி காணப்படும். ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் உங்களுடைய வேலைகளை சரியாக செய்து வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு சென்றால் ஒவ்வொரு நொடியும் நீங்கள் இருப்பது சொர்க்கத்தில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இறந்தவர்களை பற்றியோ மரணத்தை பற்றியோ நீங்கள் காண கூடிய கனவுகள் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு சில பிரச்சினைகளையும் அல்லது உங்களுக்கு வரக்கூடிய அதிர்ஷ்டத்தையும் குறிப்பது. கனவுகள் பிரச்சனைகளை பற்றி எச்சரித்தால் நீங்கள் அதற்கு முன்னரே ஆயத்தமாக வேண்டும் என்பதை குறிக்கும் விதமாகவே இந்த கனவுகள் வருகிறது. இதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் வரக்கூடிய பெரிய பிரச்சனைகளை தடுத்து, தவிர்த்து சிறிய பிரச்சனையாக மாற்றிவிடலாம்.
இறந்து போனவர் உங்களுடைய கனவில் வந்து உங்களுடன் பேசும் பொழுது அவர் என்ன பேசுகிறார் என்பதை நீங்கள் கவனமாக கேளுங்கள். ஒரு சில நேரங்களில் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பிரச்சனைகள் குறித்து நீங்கள் எந்த விதமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை சொல்வதாக கூட இருக்கலாம்.
இறந்து போன ஒருவர் உங்களுடைய வீட்டில் இருப்பது போல நீங்கள் கனவில் கண்டால் இது உங்களுடைய குடும்பத்தோடு நீங்கள் சேர்ந்திருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அதாவது குடும்ப உறவுகளிடம் இருந்து நீங்கள் விலகி செல்கிறீர்கள் என்பதையும் இது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதையும் இது குறிக்கிறது. குடும்ப உறவுகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனையையும் குறிக்கும். இப்படிப்பட்ட கனவு உங்களுக்கு வந்தால் நீங்கள் உங்களுடைய குடும்பத்தினருடன் அன்புடன், சந்தோஷமாக, பாசமாக குடும்பத்தினருக்காக நேரத்தை செலவிட வேண்டும் என்பதை இது குறிக்கிறது. இல்லாவிட்டால் மிகப்பெரிய பிரச்சனையை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள் என்பதையும் இந்த கனவு குறிக்கிறது.
இறந்து போன ஒருவர் உங்களுடைய கனவில் அடிக்கடி தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை அடைய வேண்டுமென அதற்காக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருந்திருப்பீர்கள். ஆனால் சமீபகாலமாக அந்த முயற்சிகளில் இருந்து பின்வாங்கி அதற்காக எந்த உழைப்பையும் செலுத்தாமல் இருந்திருப்பீர்கள். அப்படி நீங்கள் இருந்தால் உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொடர்ந்து கடினமாக உழைத்து நீங்கள் நினைத்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதை குறிக்கும் விதத்தில் இந்த கனவு உங்களுக்கு தொடர்ந்து வருகிறது.
நீண்ட காலத்திற்கு முன்பு இறந்த ஒருவரை நீங்கள் உங்களுடைய கனவில் காண்பது அவர்கள் உங்களுக்கு முக்கியமான ஒரு ஆலோசனையை சொல்வதாகவும் இருக்கலாம். இறந்த நபர் அவருடைய வாழ்க்கையில் செய்த தவறுகளைப்பற்றி உங்களுக்கு எச்சரிப்பதாகவும் இருக்கலாம். காரணம் அவர் செய்த அதே தவறை நீங்கள் செய்யும் நிலையில் இருக்கிறீர்கள். அது உங்கள் உறவாகவோ அல்லது உங்கள் தொழிலாகவோ இருக்கலாம்.
முடிவை எடுப்பதற்கு முன்பாக நன்றாக சிந்தியுங்கள். ஏனென்றால் இது உங்களுடைய வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப் போடக்கூடும். தொழில், வாழ்க்கை தேர்வுகள் மற்றும் உறவுகளின் முடிவுகளை உங்கள் பயணத்தின்போது எடுக்கக்கூடாது. அதாவது நினைத்தவுடன் நீங்கள் செயல்படுத்தக் கூடாது. அதை முடிவு செய்வதற்கு நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள் என்பதை குறிக்கும் விதமாக இந்த கனவு உங்களுக்கு வரலாம்.
உங்களுடைய கனவில் நீங்கள் இறந்த ஒருவரை மீண்டும் இறப்பது போல கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. நீங்கள் சென்று கொண்டிருக்க கூடிய லட்சிய பாதையில் இருந்து விலகி அதில் ஒரு நாட்டம் இல்லாமல் இருக்கிறீர்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து செயலற்று இருந்தால் உங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய ஓட்டம் அதில் தடங்கல் இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் வைரங்களை கண்டுபிடிக்க முடியும். அதாவது வைரங்கள் போன்ற உங்கள் லட்சியத்தை நீங்கள் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள் என்பதை குறிப்பதாக இந்த கனவு அமைகிறது.
நீங்கள் உங்களுடைய கனவில் அதிக அளவில் இறந்த உடல்களை கண்டால் இந்த கனவு உங்களுக்கு வரப்போகிற ஆபத்தை குறிக்கிறது. உங்களுடைய தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க போகிறீர்கள். எப்படிப்பட்ட மிகமோசமான சிக்கலாக இருந்தாலும் நீங்கள் அதிலிருந்து வெளிவர எவ்வளவு அதிகமாக முயற்சிக்கிறீர்களோ அவ்வளவு வேகமாக நீங்கள் அந்த பிரச்சனையிலிருந்து வெளிவரலாம் என்பதை இந்த கனவு குறிக்கிறது.
இறந்து போன ஒருவர் உங்களுக்கு பணத்தை கொடுப்பது போல நீங்கள் கனவு கண்டால் இது ஒரு நல்ல அறிகுறி. விரைவில் உங்களுக்கு செல்வம் அதிகரிக்கும். மேலும் உங்களுடைய வேலையில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். வேலை செய்யுமிடத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது.
இறந்தவர்களை நீங்கள் உங்கள் கனவில் காண்பது உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என்பதை குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் நீண்ட காலம் சந்தோசமாக வாழ்வீர்கள் என்பதையும் இது குறிக்கிறது.
இறந்து போனவர்கள் உங்களுடைய வீட்டில் தூங்குவதைப் போல நீங்கள் கனவில் கண்டால் நீங்கள் மிகப்பெரிய ஒரு பிரச்சனையில் இருந்து தப்பித்து விடுவீர்கள் என்பதை இது குறிக்கிறது.
இறந்தவர்கள் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவதுபோல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். மேலும் செல்வச்செழிப்பு ஏற்படும்.
இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல நீங்கள் கனவு கண்டால் தவிர்க்க முடியாத மோசமான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு உதவ பலர் வருவார்கள் என அர்த்தம்.
நீங்கள் இறந்து விட்டது போல கனவு காண்பது உங்களுடைய ஆயுளை அதிகரிக்கும். நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்வீர்கள்.
இறந்துபோன உங்களுடைய அப்பா கனவில் வந்தால் உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடித்து அந்தப் பிரச்சனையில் இருந்து வெளியே வருவீர்கள் என அர்த்தம்.
இறந்துபோன உங்களுடைய அம்மா உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ ஒரு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என அர்த்தம்.
உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட யாராவது ஒருவர் இறந்து விடுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுடைய துன்பங்கள் சீக்கிரத்தில் விலகப் போகிறது என்பதை இது குறிக்கிறது.
இறந்து போனவர்களை நீங்கள் தூக்கி செல்வது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
இறந்து போனவர்கள் கனவில் வந்து உங்களை ஆசீர்வதிப்பது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும் என அர்த்தம்.
இறந்து போனவர்கள் உங்களுடைய கனவில் வந்து அழுவது போல நீங்கள் கனவு கண்டால் அந்த கனவு உங்களுக்கு வரப்போகிற சிக்கல்களை குறிக்கிறது.
உங்களுடைய நண்பன் இறந்து போனது போல நீங்கள் கனவு கண்டால் கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து சேரும் என்பதை குறிக்கிறது.
ஒரு குழந்தை இறந்து போவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை இது குறிக்கிறது.
இறந்து போன மனைவி மேலுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். இறந்து போன மனைவி மிகவும் சோகமாக இருப்பது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கை நிலையற்றதாக மாறிவிடும்.
பல தலைமுறைகளுடன் வாழ்ந்து இறந்த பெரியவர்கள் உங்கள் கனவில் வந்து உங்களை ஆசீர்வதிப்பது போல கனவு கண்டால் வரவிருக்கும் உங்களுடைய வாழ்க்கையில் எந்த சிக்கல்களும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க போகிறது என்பதைக் குறிக்கிறது.
இறந்தவர்களுக்கு நீங்கள் உணவு கொடுப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். தடைபட்ட காரியங்கள் விலகி பிரச்சினைகள் நீங்கி உங்களுக்கு சாதகமாக முடியும்.
இருந்தவர் உங்களுடைய கனவில் வந்து தொடர்ந்து உங்களுடைய பெயரை அழைத்துக்கொண்டு இருப்பது போல நீங்கள் கனவு கண்டால் வரும் நாட்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரப்போகிறது என்பதை குறிக்கிறது.
இறந்து போன தாய், தந்தை தொடர்ந்து உங்கள் கனவில் வந்தால் விரைவில் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு ஆபத்து வரப்போகிறது அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்பதை குறிக்கிறது.
துர்மரணம் அடைந்தவர்கள் உங்களுடைய கனவில்வந்தால் ஒருசில பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.