கனவுகள்

கனவு கண்டு எழும் பொழுது வலதுபுறம் படுத்திருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

நீங்கள் கனவு கண்ட பிறகு விழித்தெழும்பொழுது இடதுபுறமாக படுத்திருந்தால் உங்களுடைய முன்னோர்கள் குறிப்பால் எதையோ உங்களுக்கு உணர்த்தப் பார்க்கிறார்கள் என அர்த்தம். நீங்கள் கனவு கண்டு கண் விழிக்கும் பொழுது வலதுபுறமாக படுத்திருந்தால் உங்களுடைய குலதெய்வம் அல்லது நீங்கள் வணங்கக் கூடிய இஷ்டதெய்வம் உங்களுக்கு குறிப்பால் வரப்போகிற பிரச்சனைகளை உணர்த்துவதாக அர்த்தம்.

இவை இரண்டும் இல்லாமல் குப்புறப் படுத்திருந்தால் பூர்வ ஜென்மத்தில் நடந்த சம்பவங்களை உங்களுடைய ஆன்மா உங்களுக்கு நினைவு படுத்துவதாக அர்த்தம். பூர்வ ஜென்மத்தில் அல்லது இந்த ஜென்மத்தில் நல்ல எண்ணங்களையும் செயல்களையும் செய்தால் மட்டுமே தொடர்ந்து உங்களுக்கு நல்லது நடக்கும். நல்ல கனவுகள் வரும். நீங்கள் தெரியாமல் செய்யக்கூடிய தவறுகளுக்கு அதற்குரிய பரிகாரங்களை செய்து மனநிம்மதியுடன் வாழ்வது உங்களுக்கு சிறப்பான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

மாடு உங்களை விரட்டுவது போலவோ அல்லது முட்டுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு விபத்துக்கள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும்.

மல்லி பூவை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பதை குறிக்கிறது.

கரும்பு மற்றும் கரும்பு காட்டை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய வாழ்க்கை இப்பொழுது இருப்பதை விட முற்றிலுமாக மாறுபட போகிறது என்பதை குறிக்கிறது.

பாம்பை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் உங்களுக்கு இருக்கக் கூடிய பல பிரச்சனைகளில் இருந்து வெளிவர போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

நீங்கள் காலையில் எழுந்ததும் சங்கு அல்லது மணியோசை சத்தம் கேட்பது போல உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் நல்ல செய்திகள் உங்கள் இல்லம் வந்து சேரும் என்பதைக் குறிக்கிறது.

புலி போன்ற கொடிய மிருகங்கள் உங்களுடைய கனவில் வந்தால் நீங்கள் எப்பொழுதாவது வேண்டிக்கொண்ட வேண்டுதல்களை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. அப்படிப்பட்ட ஏதாவது வேண்டுதல்கள் இருந்தால் உடனடியாக அதை செய்ய வேண்டும்.

யானை உங்களுடைய கனவில் வருவது போல கண்டால் விநாயகப் பெருமானின் பரிபூரண அருள் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம்.

வெள்ளை பசுவை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு விரைவில் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதை குறிக்கிறது.

யானை உங்களை விரட்டுவது போல நீங்கள் கனவில் கண்டால் விநாயகருக்கு செய்யவேண்டிய பரிகாரங்கள் ஏதாவது நீங்கள் செய்யாமல் இருப்பீர்கள், அல்லது விநாயகருக்கான பரிகாரத்தை உடனடியாக செய்ய வேண்டும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் தாமரைப் பூவை கண்டால் விரைவில் உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வரப்போவதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் தேங்காயை கண்டால் நல்ல சந்தோஷமான செய்திகள் உங்கள் காதை விரைவில் வந்தடையும்.

நீங்கள் உங்களுடைய கனவில் மீனைக் கண்டால் உங்களுக்கு பொன், பொருள், ஆபரண சேர்க்கை விரைவில் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஆலயத்தை கண்டால் விரைவில் உங்களுக்கு அதிக அளவில் செல்வம் கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் லட்சுமி தேவியின் அருள் கிடைப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏற்படக்கூடிய பணப் பிரச்சனைகள் தீரும் என்பதை குறிக்கிறது.

Related posts

Leave a Comment