November 27, 2022
உடல்நலம்

சூடான உணவின் மேல் எலுமிச்சை சாற்றை பிழிந்து விடுவது ஆபத்தா ?

ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு கொடுக்கிறது எலுமிச்சம்பழம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். குடலை ஆரோக்கியமாக பாதுகாக்கும். உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.

இப்படி நம்முடைய உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது. இதனால் எலுமிச்சம் சாற்றை உணவில் பல்வேறு வழிமுறைகளில் பலரும் பயன்படுத்துவார்கள்.

ஒரு சிலர் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீரை குடிப்பார்கள். சிலர் சாப்பிடும்போது எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து சாப்பிடுவார்கள். அன்றாட உணவோடு எலுமிச்சம் பழத்தையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர்.

உதாரணமாக சாதத்தில் எலுமிச்சம் பழத்தைக் கலந்து சாப்பிடுபவர்கள் பலர் உண்டு. அது போல ரொட்டி சாப்பிடும்பொழுது அதோடு எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து சாப்பிடுபவர்களும் பலருண்டு.

பருப்பில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிடுபவர்கள் பலருண்டு. இது நாம் சாப்பிடக்கூடிய இந்த உணவுகளுக்கு அட்டகாசமான சுவையை கொடுப்பது நம் அனைவருக்கும் தெரியும். இதெல்லாம் சரி.

எலுமிச்சம் பழச்சாற்றை சூடான உணவில் சேர்த்துச் சாப்பிடுவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்கிறார்கள். அப்படி என்ன ஆபத்துகள் நம்முடைய உடலுக்கு ஏற்படும் பார்ப்போம்.

எந்த ஒரு சிட்ரஸ் பழத்திலும் காணப்படும் வைட்டமின் சி சூடான உணவில் சேர்க்கப்படும் பொழுது வைட்டமின் சி முற்றிலும் அழிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் வைட்டமின் சி எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என உணவு வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

வைட்டமின் சி நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆனால் சூடான உணவுடன் சேர்த்து சாப்பிடும்பொழுது இந்த நன்மைகள் நமக்கு கிடைப்பதில்லை.

எலுமிச்சம் பழத்தை நாம் பயன்படுத்தும் பொழுது சாதாரண வெப்பநிலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுகளில் எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து பயன்படுத்துவதற்கு முன்னர் அந்த உணவை ஆற வைக்க வேண்டும்.

சூடு ஆறிய பிறகு உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்து நாம் பயன்படுத்தும் பொழுது அதிக ஆரோக்கிய நன்மைகள் நம்முடைய உடலுக்கு கிடைக்கும்.

Related posts

Leave a Comment