November 30, 2022
வேலைகள்

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.70,000/- சம்பளம்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு நாளைய தினத்தில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நாளையே தொடக்க தேதி. விண்ணப்பிக்க கடைசி தேதி 19.07.2022. மொத்தம் 32 பணிகள் காலியாக உள்ளன.

வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம்/துறை: Power Grid Corporation of India Limited
காலியாக உள்ள வேலையின் பெயர்: Deputy Manager and Assistant Manager
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.06.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.07.2022
கல்வித் தகுதி விவரம்: விண்ணப்பதாரர்கள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து அதற்கு சமமான கல்வித்தகுதி தேவை.
வயது தகுதி: 01.06.2022 தேதியின்படி துணை மேலாளர் (Deputy Manager) பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 33 மற்றும் உதவி மேலாளர்(Assistant Manager) 36 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்: துணை மேலாளருக்கான சம்பளம் மாதம் ரூ. 70000/- PM மற்றும் உதவி மேலாளர் சம்பளம் மாதம் ரூ.60000/-
மொத்த காலிப்பணியிட விவரம்: 32 காலிப்பணியிட விவரம்
Deputy Manager: 17 Vacancies
Assistant Manager: 15 Vacancies

வேலை வகை: மத்திய அரசு வேலை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்க்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

PGCIL ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?
PGCIL அதிகாரப்பூர்வ இணையளத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் “Career” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்தப் பக்கத்தில் உள்ள அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.
“ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்து
விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பத்தை
“Submit” கிளிக் செய்து, எதிர்கால நோக்கத்திற்காக பதிவு படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்க நாளையே ஆரம்ப தேதி.
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.07.2022
அறிவிப்பு விவரம்:
https://www.powergrid.in/
https://drive.google.com/file/d/1SG9uR9z3iYKd4cfLYTR64H1fQFNAb5_w/view
https://www.powergrid.in/dy-managerasstt-manager-erp-it-information-security-function

Related posts

Leave a Comment