வேலைகள்

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்(Legal Cum Probation Officer)பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம் – ரூ.27,804/- (தொகுப்பூதியம்)

காலியிடம் – 1
ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு

வயது வரம்பு – நாற்பது வயது பூர்த்தி அடைந்திருக்க கூடாது

கல்வி தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை சட்ட படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான திட்டங்களில் அரசு மற்றும் அரசு சாராத நிர்வாகத்தில் இரண்டு வருட முன் அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை தொடர்பான விவகாரத்தில் நல்ல புரிதல் இருக்க வேண்டும்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் செங்கல்பட்டு மாவட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பங் களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை அனுப்ப வேண்டிய முகவரி,

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அரசினர் சிறப்பு இல்ல வளாகம்,
ஜிஎஸ்டீ சாலை,
தாலுகா காவல் நிலையம் அருகில்,
செங்கல்பட்டு – 603 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் முப்பதாம் தேதி மாலை 5.45-க்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment