November 30, 2022
வேலைகள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

திருச்சிராப்பள்ளி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்(Coaching cum Guidance Centre for SC & ST)அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இனசுழற்சி அடிப்படையில் பொது பிரிவினர் முன்னுரிமையற்றவர்கள்(General Turn General Non-Priority)இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

இப்பணியிடத்திற்கு 01/07/2022 அன்றைய நிலையில் குறைந்தபட்ச வயது 18-ம் பொது பிரிவினர் 32 வயதிற்கு மிகாமலும், BC, MBC/DNC பிரிவினர் 34 வயதிற்கு மிகாமலும், SC/ST & SCA பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தகுதியான மனுதாரர்கள் விண்ணப்பங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 15/11/2022-க்குள்
உதவி இயக்குநர்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும்,
தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,
கண்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி – 620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.

இவ்விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15/11/2022, மாலை 5.45 மணி. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment