January 31, 2023
வேலைகள்

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு அலுவலகம் விளையாட்டு கோட்டாவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல வகையான விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணி நிலைகள் – பிரிவு – சி நிலை 5 /நிலை 4
பணியிடங்கள் – 5
சம்பளம் – ரூ.29,200-92,300/- அல்லது ரூ.25,500-81,100/-

பணி நிலைகள் – பிரிவு – சி நிலை 2 /நிலை 3
பணியிடங்கள் – 16
சம்பளம் – ரூ.21,700-69,100/- அல்லது ரூ.19,900-63,200/-

விளையாட்டு பிரிவுகள் :

குத்துச்சண்டை, கைப்பந்து, கோ-கோ, குண்டு எரித்தல், கூடைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், ஈட்டி எரித்தல், கிராஸ் கண்டிரி மற்றும் எடை தூக்குதல்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு பதினெட்டில் இருந்து இருபத்தி ஐந்தாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

பணி – நிலை 5 சம்பளப் பணி
தகுதி – ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

பணி – நிலை 4 சம்பளப் பணி
தகுதி – பட்டப்படிப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு சான்றிதழ்

பணி – நிலை 2 மற்றும் நிலை 3 சம்பளப் பணி
தகுதி – பனிரெண்டாம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்கள் ட்ரயல் தேர்வு மற்றும் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் செய்த சாதனை போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தியன் ரயில்வே பணியில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் இப்பணிகளுக்கு https://secr.indianrailways.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு தேவையான தகுதி மற்றும் விதிமுறைகளை முறையே படித்து பின்னர் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://nitplrrc.com/RRC_BSP_SPRT2022/

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள் – 26/11/2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள் – 25/12/2022
திறன் தேர்வு நடைபெறும் மாதம் – டிசம்பர் இருபத்தி இரண்டு அல்லது ஜனவரி 2023

மேலும் விவரங்களுக்கு https://secr.indianrailways.gov.in/uploads/files/1669440216691-English%20Notification%20upload.pdf

Related posts

Leave a Comment