November 30, 2022
வேலைகள்

தமிழக கல்வித் துறையில் ரூ.2,05,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான ஐந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர் – தமிழ்நாடு கல்விப் பணிகள்

பதவியின் பெயர் – நிதியாளர்

காலிப்பணியிடங்கள் – ஐந்து

சம்பளம் – ரூ.56,100 முதல் 2,05,700 வரை

வயது வரம்பு :

SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 37-க்குள் இருக்க வேண்டும். மற்ற பணியாளர்களுக்கு அதிகபட்ச வயதானது 32க்குள் இருக்க வேண்டும்.

நிதியாளர் பணிக்கான கல்வித் தகுதி:

பொது நிர்வாகத்தில் முதுகலை(M.A.Public Administration)பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்(MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேரடி ஆட்சேர்ப்பு படி கணினி வழி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தேர்வு நிலையங்கள் அமைக்கப்படும்.

தேர்வு கட்டணம்:

பதிவு கட்டணம் – ரூ.150/-

தேர்வு கட்டணம் – ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் முகவரி: https://apply.tnpscexams.in/

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் – 11/11/2022

விண்ணப்பிக்கக் கடைசி நாள் – 10/12/2022

விண்ணப்பம் திருத்தம் செய்ய இயலும் நாள் – 15/12/2022 – 17/12/2022

விண்ணப்பத்தில் இணையத்தில் ஆவணங்கள் மாற்றம்/பதிவேற்றம் செய்யக் கடைசி நாள் – 26/02/2023 மேலும் விபரங்களுக்கு https://tnpsc.gov.in/Document/tamil/32_2022_%20BURSAR%20TAM_1.pdf

Related posts

Leave a Comment