November 27, 2022
வேலைகள்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்…!

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் இருபத்தி இரண்டாம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் ஓசூர் டாடா நிறுவனம் இனைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பதினெட்டு முதல் இருபது வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

நாள் மற்றும் இடம்:

சூலக்கரை, ஐஐடி வளாகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (22.11.2022), காலை பத்து மணி முதல் நடைபெறும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணியிடம்: இளநிலை தொழில் நிபுணர்கள்

டாடா தொழிச்சாலையின் இடம்: ஓசூர், தமிழ்நாடு

படிப்பு: 2020,2021,2022-ம் கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி

துவக்கநிலை சம்பளம்: மாதாந்திர மொத்த சம்பளம் (CTC) 16,557/- மற்றும் போனஸ்

பணியாளர்க்கான நலத்திட்டங்கள்: நிரந்தர வேலை வாய்ப்பு. வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை

நம்பிக்கைக்குகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்

தேலையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்

ஒழுங்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அனைத்து நலத்திட்டங்கள் (PF/Gratuity/ESI போன்றவை) வழங்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment