November 27, 2022
டெக்னாலஜி

இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! பேஸ்புக்கில் புதிய டேட்டிங் சேவை அறிமுகம் ..

பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க உள்ளிட்ட 20 நாடுகளில் ’டேட்டிங் ’என்ற புதுசேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இளைய தலைமுறையினரின் உலகளாவிய முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது பேஸ்புக் ஆகும்.

இதன் வாடிகையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த டேட்டிங் சேவையை ஏற்கனவே பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவர்கள் இதில் பயன்படுத்தலாம் எனவும், ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கின் மூலமாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டேட்டிங் சேவையில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது.

மேலும், இந்த டேட்டிங் செயலி அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்துவதற்காக பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்டு தற்போதுள்ள பேஸ்புக் செயலியிலேயே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, தற்போது நீங்கள் பயன்படுத்திவரும் சாதாரண பேஸ்புக் செயலியிலேயே இந்த டேட்டிங் வசதி அந்தந்த நாட்டில் செயற்பாட்டிற்கு வரும்போது சேர்க்கப்படுமென்றும், உங்களது பேஸ்புக் கணக்கு விவரங்களை பகிராமலே மற்றவர்களுக்கு தெரிவிக்காமலே இந்த வசதியை பயன்படுத்த முடியுமென்று பேஸ்புக் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கியமாக மெசெஞ்சர் மூலம் தகவல்களை அளிக்கலாம்.ஃபாலோயர்களையும் இதில் இணைக்கலாம்.

மேலும் இதில், ஸ்டோரி என்ற வகையில் ஸ்டேட்டஸ் பகிரும் வசதிகள் இருப்பது கூடுதல் அம்சமாக உள்ளது. இந்த டேட்டிங் சேவை நம் இந்தியாவுக்கு 2020 ல் வரும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment