January 31, 2023
தகவல்

ஆப்பிள் பற்றி நீங்கள் அறியாத ரகசியங்கள்

ஆப்பிள் பழங்கள்தான் உலகில் பலராலும் அதிகம் விரும்பப்படும் ஒரு அற்புதமான பழமாகும். எந்தநேரத்திலும் சாப்பிட உகந்த இந்த ஆப்பிளை பற்றி நமக்கு தெரியாத பல சுவராஸ்யமான தகவல்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

குடும்பம்

பேரீச்சம்பழம் மற்றும் பிளம்ஸைப் போலவே ஆப்பிள்களும் ரோஜா குடும்பத்தின் ஒரு வகையாகும். ஆப்பிள் மரம் மத்திய ஆசியாவில் தோன்றியது. அவை ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு, ஐரோப்பிய குடியேற்றவாசிகளால் வட அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

வகைகள்

உலகம் முழுவதும் 8,000 க்கும் மேற்பட்ட வகையான ஆப்பிள்கள் உள்ளன தெரியுமா? அமெரிக்காவில் சுமார் 2,500 வகைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றில் சுமார் 100 வணிக ரீதியாக விற்கப்படுகின்றன. அமெரிக்காவில் வளர்க்கப்படும் இரண்டாவது மிக மதிப்புமிக்க பழம் ஆப்பிள்கள் ஆகும்.

உற்பத்தி

ஆப்பிள் மிகவும் பரவலாக வளர்க்கப்படும் மர வகை. இது ருசி மிகுந்த பழங்களில் ஒன்றாகும். ஆப்பிள் மரங்கள் அவற்றின் முதல் பழத்தை உற்பத்தி செய்ய 4 முதல் 5 ஆண்டுகள் வரை எடுத்து கொள்கிறது. அதாவது ஆப்பிளை நீங்கள் நட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகே பழங்களை அறுவடை செய்ய முடியும். சில வகை இனங்கள் முதல் விளைச்சலை கொடுக்க 10 ஆண்டுகள் வரை ஆகும்.

வசந்த காலம்

ஆப்பிள் மரங்கள் இலையுதிர் காலத்தில் பட்டுபோனது போல காணப்படும். ஆனால் வசந்த காலம் வந்தவுடனே அது பசுமையாக மாறி பார்க்கவே அழகாக காணப்படும். தேனீக்கள் வசந்த காலத்தின் பிற்பகுதியில் ஆப்பிள் பூக்களில் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. இதனால் மகரந்தம் ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு நகரும். பழம் பழுத்து பறிக்க தயாராகும் நேரத்தில், அடுத்த மொட்டுகள் அந்த இடத்தில் தயாராகிவிடும்.

ஆயுட்காலம்

ஆப்பிள் மரம் பொதுவாக 1.8 முதல் 4.6 மீட்டர் (6 முதல் 15 அடி) வரை சாகுபடி செய்யும் பொழுது வளர்கிறது. ஆனால் காடுகளில் 12 மீட்டர் (39 அடி) உயரம் வரை வளர்கிறது. ஆப்பிள் மரத்தின் ஆயுட்காலம் சுமார் 100 ஆண்டுகள் ஆகும்.

நினைவாற்றலை அதிகரிக்க

சீனா தான் இதுவரை உலகிலேயே மிகப்பெரிய ஆப்பிள் உற்பத்தியாளராக உள்ளது. ஆப்பிள் உங்கள் நினைவாற்றலை மிகவேகமாக அதிகரிக்க உதவும்.

உற்சாகத்தை தரும்

ஆப்பிள்களில் அதிக அளவு போரான் உள்ளது. இது மூளையின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் மனதை எப்பொழுதும் விழிப்புணர்வுடன் வைத்திருக்கும். இதனால் நீங்கள் எப்பொழுதும் உற்சாகமாக இருப்பீர்கள்.

ஆப்பிளின் தோல்

ஆப்பிளின் தோலில் குர்செடின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிளில் 80 கலோரிகள் உள்ளன. ஆப்பிள்களில் உள்ள கரையக்கூடிய நார் பெக்டின் என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

இலைகளின் சக்தி

ஆப்பிள் மரம் ஒரு ஆப்பிளை உற்பத்தி செய்ய தன்னுடைய 50 இலைகளில் இருந்து சக்தியை எடுக்கும். போமாலஜி என்பது ஆப்பிள் வளரும் அறிவியல். ஆப்பிள் மரபணு 2010 இல் டிகோட் செய்யப்பட்டது.

தண்ணீரில் மிதக்கும்

ஆப்பிள் தண்ணீரில் மிதப்பதை நாம் பார்த்திருப்போம். இதற்கு காரணம் ஆப்பிள்களில் தண்ணீர் இருப்பதே ஆகும். ஆப்பிள்களில் 25% காற்று இருக்கிறது.

விலையுயர்ந்த ஆப்பிள்

உலகின் மிக விலையுயர்ந்த ஆப்பிள் செக்காய் இச்சி ஆப்பிள் ஆகும். இந்த ஆப்பிள் ஒன்றின் விலை 21 டாலர்கள். செக்காய் இச்சி என்பது ஜப்பானிய மொழியில் “உலகின் நம்பர் ஒன்” என்று பொருள்.

மிகப்பெரிய ஆப்பிளின் எடை

உலகிலுள்ள மிகப்பெரிய ஆப்பிளின் எடை 1.849 கிலோ. அக்டோபர் 24, 2005 அன்று ஜப்பானின் ஹிரோசாகி நகரத்தில் உள்ள ஆப்பிள் பண்ணையில் விளைந்த சிசாடோ இவாசாகி என்னும் ஆப்பிள் 1.849 கிலோ (4 எல்பி 1 அவுன்ஸ்) எடை இருந்தது. இதுவே உலகிலுள்ள மிகப் பெரிய ஆப்பிள்.

ஆப்பிள் மலர்கள்

ஆப்பிள்கள் ஆரோக்கியம், அன்பு மற்றும் கருத்தரித்தல் ஆகியவற்றைக் குறிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் மலர்கள் என்பது பெண்ணின் அழகின் அடையாளமாகும்.

செல்வசெழிப்பின் அடையாளம்

பண்டைய கிரேக்கத்திலும் ரோமிலும் ஆப்பிள்கள் பிரபலமாக இருந்தன. அவை செல்வசெழிப்பின் அடையாளமாக இருந்தன. நார்ஸ் புராணங்களில் இளைஞர்களின் தெய்வம், இடூன் மேஜிக் ஆப்பிள்களை வளர்ப்பதாக நம்பப்பட்டது. இது கடவுள்களை இளமையாக வைத்திருந்தது எனவும் நம்பப்படுகிறது.

அமைதியை குறிக்கிறது

சீனாவில் ஒருவரைப் பார்க்கும்போது கொடுக்க வேண்டிய பிரபலமான பரிசு ஆப்பிள். ஏனென்றால் சீன கலாச்சாரத்தில், ஆப்பிள்களுக்கான சொல் ‘பிங்’ என்று உச்சரிக்கப்படுகிறது, இது அமைதியை குறிக்கிறது.

ஈர்ப்பு விசை

சர் ஐசக் நியூட்டன் தனது ஈர்ப்பு விசை விதியைக் கொண்டு வந்தபோது ஒரு ஆப்பிள் தலையில் விழுந்ததாக ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.

பழமொழி

ஆப்பிள்கள் சம்பந்தப்பட்ட மிகவும் பிரபலமான பழமொழி என்னவென்றால், “ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்” மருத்துவரை நீங்கள் சந்திக்க வேண்டாம்.

பயம்

ஆப்பிள்களை பற்றிய பயம் மாலுஸ்டோமெஸ்டிகோபோபியா என்று அழைக்கப்படுகிறது.

செல்ல பெயர்

நியூயார்க் நகரம் பெரிய ஆப்பிள் என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுகிறது.

ஆப்பிள் சீடர்

ஒரு கேலன் ஆப்பிள் சீடர் உருவாக்க சுமார் 36 ஆப்பிள்கள் தேவைப்படும். 1 கேலன் என்பது 3.78 லிட்டர் ஆகும்.

சாப்பிட ஆரம்பித்த காலம்

கி.மு 6,500 ஆண்டுகளுக்கு முன்பதாகவே மக்கள் ஆப்பிள் சாப்பிடுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பறிக்கும் முறை

உலகில் பெரும்பாலான ஆப்பிள்கள் இன்னும் கையால் தான் பறிக்கப்படுகின்றன.

அமெரிக்கர்கள் சாப்பிடும் ஆப்பிளின் அளவு

அமெரிக்கர்கள் வேறு எந்த பழங்களையும் விட ஆப்பிள்களை அதிக அளவில் சாப்பிடுகிறார்கள். யு.எஸ்.டி.ஏ பொருளாதார ஆராய்ச்சி படி, சராசரியாக அமெரிக்கர் ஒருவர் சுமார் 16 பவுண்டுகள் பிரெஷ் ஆப்பிள்களையும், 28 பவுண்டுகள் ஜூஸ் , சைடர் அல்லது சாஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட ஆப்பிள்களின் தயாரிப்புகளையும் சேர்த்து மொத்தம் 44 பவுண்டுகளை சாப்பிடுகிறார்.

பழுக்கும் நிலை

ஆப்பிள்கள் குளிரூட்டப்பட்ட இடத்தில் இருப்பதை விட அறை வெப்பநிலையில் 10 மடங்கு வேகமாக பழுக்கும்.

முதல் பத்து வகை ஆப்பிள்கள்

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் முதல் பத்து வகை ஆப்பிள்கள் காலா, ரெட் டெலிசியஸ், கிரானி ஸ்மித், புஜி, கோல்டன் டெலிசியஸ், ஹனிக்ரிஸ்ப், மெக்கின்டோஷ், ரோம், கிரிப்ஸ் பிங்க் மற்றும் எம்பையர் ஆகியவை ஆகும்.

840 பவுண்டுகள்

ஒரு ஆப்பிள் மரம் சராசரியாக 840 பவுண்டு பழங்களை உற்பத்தி செய்கிறது.

முதல் பழத்தோட்டம்

முதல் அமெரிக்க ஆப்பிள் பழத்தோட்டம் 1625 ஆம் ஆண்டில் வில்லியம் பிளாக்ஸ்டோனால் பாஸ்டனின் பெக்கான் மலையில் நடப்பட்டது.

Related posts

Leave a Comment