November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

காடுகள் பற்றி உங்களில் பலரும் தெரிந்திராத உண்மைகள்

நம்மில் பலரும் அறிந்திராத காடுகள் பற்றிய ஒரு சில சுவாரஸ்ய தகவல்களை பற்றி பார்ப்போம்.

நம் அனைவருக்கும் தெரியும் காடுகள் என்பது மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி. 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகின் நிலப்பரப்பில் சராசரியாக 31 சதவிகிதம் காடுகள் உள்ளது. அதாவது 10 பில்லியன் ஏக்கர். இந்த 10 பில்லியன் ஏக்கர் காடுகளில் 1.8 பில்லியன் காடுகள் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.

உலகில் பாதிக்கும் மேற்பட்ட காடுகள் பிரேசில், கனடா, சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. காடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் தாவரங்கள் உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சுமார் 160 கோடி மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளுக்காக காடுகளை நம்பி இருக்கிறார்கள். நாம் பயன்படுத்தக் கூடிய மருந்துகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை மழைக்காடு தாவரங்களிலிருந்து கிடைக்கிறது. இதுவரைக்கும் ஒரு சதவிகித மழைக்காடு தாவரங்கள் மட்டுமே மருத்துவ குணங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பயன்படுத்தப்படுகிறார்கள். காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் சிறைக்கைதிகளுக்கு தண்டனை காலம் குறைக்கப்படுகிறது. வழக்கமான சிறையிலுள்ள வேலைகளை விட இதற்கு அதிக ஊதியம் கிடைக்கிறது.

பூமியின் இயற்கை காடுகளில் 80% க்கும் அதிகமானவை ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளன.

கோபி பாலைவனத்தின் பரவலைத் தடுக்க சீனா உலகின் மிகப்பெரிய செயற்கைக் காடுகளை ஏற்படுத்தி அதை 2074 ஆம் ஆண்டுக்குள் 2,800 மைல்களாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் மரம் காடுகளில் வளரும் மிகப்பெரிய ரெட்வுட் மரங்கள். இந்த மரங்கள் 350 அடிக்கு மேல் உயரமாக வளரும்.

காடுகளை நாம் தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் 137 மழைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.

மரங்கள் பூமியில் மிக நீண்ட காலம் வாழ கூடிய ஒரு உயிரினம். மரங்கள் பிற உயிரினங்களைப் போல முதுமையால் இறந்து போகாது.

மரங்கள் மன அழுத்தத்தை குறைக்க வல்லது என ஆராய்ச்சி சொல்கிறது. அடர்ந்த காடு, மரங்கள் சூழ்ந்த இடங்களில் நீங்கள் நடக்கும் பொழுது உங்களுடைய மன அழுத்தம் குறைந்து மனம் லேசாகும். தொடர்ந்து மரங்களின் ஊடே நடந்து கொண்டிருப்பவர்களுக்கு மென்மையான குணம் இருக்கும் என சொல்கிறார்கள். மரங்கள் பைட்டான்சைடுகள் எனப்படும் இரசாயனங்களை வெளியிடுவதே இதற்குக் காரணம். நாம் அவற்றை சுவாசிக்கும்போது அது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், கவலை அளவைக் குறைக்கும்.

Related posts

Leave a Comment