November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

மழைத்துளி நிலத்தை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகும்! உங்களில் பலருக்கும் தெரியாத மழை பற்றிய உண்மைகள்

மழை பற்றி உங்களில் பலரும் அறிந்திராத மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பார்ப்போம்.

பூமியில் மிகக் குறைந்த மழை பெய்யும் இடம் பாலைவனத்தில் இல்லை தெரியுமா உங்களுக்கு. பனி பிரதேசத்தில்தான் மழை குறைவாக பொழிகிறதாம். அண்டார்டிகாவில் ஆண்டுக்கு 6.5 அங்குல மழை அல்லது பனி மட்டுமே பொழிகிறது. இது மிகக் குறைந்த வருடாந்திர மழையை பெறும் கண்டமாக இருக்கிறது. கொலம்பியாவின் லோரோவில் ஆண்டுக்கு 500 அங்குலம் மழைப் பொழிகிறது.

நாம் நினைத்து கொண்டிருப்பது போல வானத்திலிருந்து விழும் மழைத்துளிகள் அனைத்தும் எப்போதும் நிலத்தை வந்துசேர்வதில்லை தெரியுமா? வறண்ட, வெப்பமான இடங்களில் மழை சில சமயங்களில் தரையை வந்து சேரும் முன்னர் ஆவியாகிவிடும்.

எல்லா மழைத்துளிகளும் தண்ணீரால் ஆனது அல்ல. ஆமாங்க வீனஸ், பிற நிலவுகள் மற்றும் கிரகங்களில் மழை சல்பூரிக் அமிலம், மீத்தேனாக பொழிகிறது. 5,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் விஞ்ஞானிகள் இரும்பு மழைத்துளிகளைக் கண்டுபிடித்தனர். வீனஸில் பெய்யும் மழையானது சல்பூரிக் அமிலத்தால் ஆனது மற்றும் கடுமையான வெப்பத்தின் காரணமாக அது மேற்பரப்பை அடையும் முன்பே ஆவியாகிறது.

மழையின் வாசனையை நீங்கள் விரும்புவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தண்ணீருக்கு எந்த வாசனையும் இல்லை. பின்னர் மழை பெய்த பிறகு ஏன் ஒரு வித்தியாசமான வாசனையை உருவாக்குகிறது? களிமண் அல்லது தூசி நிறைந்த மண்ணில் மழைத்துளிகள் விழும்போது சிறிய காற்றுக் குமிழ்கள் மேல்நோக்கிச் சென்று நீர்த்துளியிலிருந்து வெடித்துச் சிதறும். இது மண்ணில் வாழும் பாக்டீரியாவால் உருவாக்கப்பட்ட ஜியோஸ்மின் என்ற மூலக்கூறின் காரணமாகும். மழை பெய்யும் போது அது சிறிய அளவிலான ஜியோஸ்மின் மூலக்கூறு இருக்கும் காற்றுப் பைகளை உருவாக்குகிறது. இது மழை துளிகளில் சிக்கி ஜியோஸ்மினை காற்றில் பறக்கவிடுகிறது. நாம் அதை சுவாசிக்கும் பொழுது அருமையான வாசனையாக தெரிகிறது. மழையின் வாசனைக்கு பெட்ரிச்சோர்(Petrichor) என்ற ஒரு பெயர் கூட உள்ளது.

ஜூலை 1979 இல் ஒரே நாளில் வெப்பமண்டல புயல் கிளாடெட் காரணமாக ஆல்வின் என்ற சிறிய டெக்சாஸ் நகரத்தில் 43 அங்குல மழை பெய்தது. 2018 ஆம் ஆண்டு வரை 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் அதிக மழைப்பொழிவு என்ற சாதனையை படைத்தது இந்த நகரம். 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஹவாய் நகரமான ஹனாலியில் உள்ள ஒரு மழை மானி ஒரு நாளில் 49.69 அங்குல மழையைப் பதிவு செய்தது.

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உள்ள நாணயத்தின் பெயர் போட்ஸ்வானன் புலா(Botswanan pula). புலா என்ற வார்த்தைக்கு மழை என்றும் பொருள் உண்டு. இந்த சப் சஹாரன் நாட்டில் மழை எவ்வளவு அரிதான மற்றும் விலைமதிப்பற்றது என்பதை குறிக்கும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு மழைத்துளி நிலத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா உங்களுக்கு ? மழைத்துளிகள் விழும் உயரம் மற்றும் அளவு வேறுபடலாம். இதனால் சரியான அளவை சொல்வது கடினம். மேக உயரம் 2,500 அடியில் இருந்தால் சராசரியாக 14 மைல் வேகத்தில் நிலத்தை நோக்கி வரும். ஒரு மழைத்துளி தரையை வந்து சேர இரண்டு நிமிடங்கள் ஆகும். மிகச் சிறிய மழைத்துளிகள் தரையை அடைய ஏழு நிமிடங்கள் வரை ஆகலாம். பெரிய நீர்த்துளிகள் 20 மைல் வேகத்தில் விழும்.

இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்சின்ராம் உலகிலேயே அதிக ஈரப்பதம் உள்ள இடம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 11,971 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.

5 டிசம்பர் 2015 ம் ஆண்டு டெஸ்மண்ட் புயலின் காரணமாக பிரிட்டனின் கும்ப்ரியாவில் உள்ள ஹானிஸ்டர் பாஸில் ஒரு நாளில் 341.4 மில்லி மீட்டர் மழை பொழிந்தது.

ஒவ்வொரு நிமிடமும் 100 கோடி டன் மழை பூமியில் பொழிகிறது.

வட அமெரிக்கா பூர்வீக அமெரிக்க பழங்குடியினரிடமிருந்து மழை நடனம் உருவானது. அவர்களில் சிலர் இன்றும் அதை நடத்துகிறார்கள். நடனக் கலைஞர்கள் தங்கள் நடன அசைவுகளால் மழையை பெய்ய வைக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

மழைத்துளிகள் 0.1 முதல் 9 மில்லிமீட்டர்கள் விட்டம் வரை இருக்கும். அதற்கு மேல் அளவு பெரிதாகும் பொழுது அவை உடைந்து போகும்.

ஒவ்வொரு நொடியும் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 16 மில்லியன் டன் நீர் ஆவியாகிறது. இந்த 16 மில்லியன் டன் தண்ணீர் ஒவ்வொரு நொடியும் பூமியில் விழும் மழைத்துளிகளின் அதே அளவுதான். நீர் அதன் அளவின் அடிப்படையில் சீரான சுழற்சியில் தொடர்ந்து நகர்கிறது.

1861 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிரபுஞ்சியில் 22,987 மில்லி மீட்டர் அதாவது 905.0 அங்குலம் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

மழைத் துளிகளில் காற்றில் இருந்து வரும் கரைந்த நைட்ரஜன் உள்ளது. இந்த இயற்கை உரமானது மழைக்குப் பிறகு புல்லை பசுமையாக மாற்றுகிறது. மழை பெய்த பிறகு செடிகள் பசுமையாக இருக்க இதுதான் காரணம்.

Related posts

Leave a Comment