May 30, 2020
தகவல்

லிப்ஸ்டிக்கில் முக்கியமாக சேர்க்கப்படும் பொருள் என்ன தெரியுமா?

நாம் அறிவியல் மற்றும் அறிவு நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அறிவியல் விஷயங்கள் எல்லாம் அறிவுப்பூர்வமான விஷயங்களாக இருக்கும். அந்த விஷயங்களுக்கு எல்லாம் ஆதாரங்களும் இருக்கும். அறிவியலில் நமக்கு தெரியாத பல உண்மைகள் உள்ளன. இந்த தொகுப்பில் நாம் அறியாத 10 அறிவியல் உண்மைகளை குறித்து பார்க்கலாம்.

குயின் எலிசபெத்

இங்கிலாந்து குயின் எலிசபெத் 2 பயன்படுத்திய வாகனம் ஒரு காலன் எரிபொருளுக்கு 6 இன்ச் தான் நகருமாம். ஒரு காலன் எரிபொருள் என்பது கிட்டத்தட்ட 3.7 லிட்டர் ஆகும்.

தேசிய அடையாளம்

அமெரிக்காவில் உள்ள தேசிய அடையாளங்களில் ஒன்று சான்பிரான்சிஸ்கோவில் உள்ள வடம் வாகனம். அந்நாட்டில் நகரும் தேசிய அடையாளம் இது மட்டும் தான்.

மோனாலிசா ஓவியம்

பல துறைகளில் திறமை வாய்ந்தவராக விளங்கியவர் லியோனார்டோ டாவின்சி. இவர் உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் வரைந்தவர். இவர் தான் நாம் இன்று பயன்படுத்தும் கத்தரிக்கோலையும் கண்டுபிடித்தார்.

லிப்ஸ்டிக்

பல வண்ண கலர்களில் லிப்ஸ்டிக் கிடைக்கிறது. இன்று லிப்ஸ்டிக் பயன்படுத்தாத பெண்களே இல்லை. ஆனால் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான லிப்ஸ்டிக்களில் மீன் செதில்கள் ஒரு முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

தீப்பெட்டி

சிகரெட் பிடிப்பவர்கள் கடைகளில் தீப்பெட்டி வாங்கி பயன்படுத்துவார்கள். இன்று வழக்கமாக சிகரெட் பிடிப்பவர்கள் சிகரெட் லைட்டரை கையுடனேயே வைத்திருப்பர். ஆனால் , தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படும் முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

கண்ணாடி ஜார்

ஒரு கண்ணாடி ஜாரை மறுசுழற்சி செய்வதன் மூலம் நாம் மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பயன்படுத்துவதற்காகச் செலவிடும் எனர்ஜியை சேமிக்க முடியும்.

பாலைவனம்

பல ஆண்டுகளாக மழை பெய்யாத பாலைவனம் தென் அமெரிக்காவின் சிலியின் அக்காமா என்ற பாலை வனம்.
இந்த பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு வரை மழை பொய்ததற்கான எந்த வித ஆதாரங்களும் இல்லை. ஆனால் பருவ நிலை மாற்றம் காரணமாக இந்த பகுதியில் 2011ம் ஆண்டு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

நூலகம்

அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் உள்ள வெல்ஸ் நூலகம் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு பூமிக்குள் மூழ்கிக் கொண்டேயிருக்கிறதாம். இதற்கு அந்த நூலகம் கட்டப்படும்போது இந்த நூலகத்தில் வைக்கப்படும் புத்தகங்களின் எடையைக் கணக்கிட்டுக் கட்ட மறந்துவிட்டார்களாம்.

விமானங்கள்

ஜம்போ ஜெட் ரக விமானங்களில் உள்ள எரிபொருளின் முழு கொள்ளளவு ஒரு வாகனம் 4 முறை உலகைச் சுற்றி வரச் செலவாகும் எரிபொருளுக்கு சம அளவாகும்.

மெத்தை

நாம் தூங்கும் மெத்தைகள் 10 ஆண்டுகளில் நாம் வாங்கும் போது இருந்த எடையை விட 2 மடங்கு எடையில் இருக்குமாம். பத்து ஆண்டு பயன்பாட்டில் தூசு, அழுக்கு , முடி, துணிகளில் உள்ள பஞ்சு, நூல்கள் எனப் பல விதமான பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெத்தைக்குள் சென்று அதன் எடை 2 மடங்காகி விடுமாம்.

பேனா

உலகில் சராசரியாக ஆண்டிற்கு 100 பேர் பால்பாயிண்ட் பேனா முனை குத்தி மரணமடைந்திருக்கிறார்கள். ஏனென்றால் ஊசி முனையை விடப் பேனா முனை கூர்மையானது.

Related posts

Leave a Comment