November 27, 2022
உடல்நலம்

உணவு உண்ட பிறகு பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்றுவந்தால்

வயிறு முட்ட சாப்பிடும் மதிய உணவிற்கு பிறகு சிறு அளவு பெருஞ்சீரகத்தை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடுவோம். பல காலமாகவே இப்படி உணவு உண்ட பிறகு பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லுவது தொடர்ந்து ஒரு பழக்கமாகவே இருந்து வருகிறது. சாப்பிட்ட பிறகு வாயில் போட்டு மெல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே பெருஞ்சீரகத்தை யாரும் வாயில் போட்டு மெல்லுவதில்லை.

அதையும் தாண்டி நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணும் ஒரு முக்கிய காரணத்திற்காக இந்த பெருஞ்சீரகம் சாப்பிட்ட பிறகு மெல்லப்படுகிறது. முதலில் சாப்பிட்ட பிறகு வெந்தயத்தை வாயில் போட்டு மெல்லுவது நீங்கள் சாப்பிட்ட துணுக்குகள் உங்களுடைய பல் இடுக்குகளில் இருந்து வெளியேற உதவி செய்யும். கூடவே உங்களுடைய வாயில் இருந்து வரக்கூடிய சாப்பிட்ட உணவுகளில் உள்ள எச்சங்களின் மணம் வெளியேறுவதையும் தடுக்கிறது.

உங்களுடைய வாய் சுத்தமாவதோடு, துர்நாற்றம் நீங்குவதோடு மிக முக்கியமாக நீங்கள் சாப்பிட்ட உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது. உணவுக்குப் பிறகு சும்மா நாம் சாப்பிடக்கூடிய பெருஞ்சீரகம் இவ்வளவு மிக முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருவதை நினைத்துப் பாருங்கள். அது மட்டுமில்லாமல் இன்னும் பல விதமான நன்மைகள் இருக்கிறது அவைகளையும் பார்ப்போம்.

கொழுப்பு நிறைந்த எண்ணெய் சத்து அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் நீங்கள் எடுத்துக் கொண்ட பிறகு பெருஞ்சீரகத்தை சாப்பிடும்பொழுது அது அந்த கொழுப்பு, எண்ணெய் நிறைந்த உணவுகள் விரைவாக செரிமானமாவதற்கு உதவி செய்கிறது. கூடவே அஜீரணம், நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை போன்ற செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளையும் இது தடுக்கிறது.

பெருஞ்சீரகம் நம்முடைய வயிற்றில் உள்ள நச்சுக்களை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கூடவே இந்த பெருஞ்சீரகத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தவும், சீர்படுத்தவும் குடலியக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பெருஞ்சீரகத்தில் இருக்கக்கூடிய டையூரிக் தன்மை உடலில் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைக்கிறது.

பெருஞ்சீரகத்தில் உள்ள நறுமண கலவைகள் உங்களுடைய வாயை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். பெருஞ்சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சி அடைய செய்கிறது. மேலும் உமிழ் நீரின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. வாயில் இருக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.

பெருஞ்சீரகம் உடலில் இருக்கக்கூடிய உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகத்தில் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மேலும் உங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பெருஞ்சீரகம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது. ஃப்ரீ ரேடிக்கல்கள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை உண்டு பண்ணி பல்வேறு வகையான புற்று நோய்களுக்கு வழிவகுக்கிறது.

பெருஞ்சீரகத்தில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உடலில் இருக்கக்கூடிய தீங்குவிளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தினமும் பெருஞ்சீரகத்தை உட்கொள்வது ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது.

பெருஞ்சீரகத்தை சாப்பிடுவது உங்களுடைய கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகத்தில் வைட்டமின் கே காணப்படுகிறது. இது உங்களுடைய கண்களுக்கு சிறந்தது மேலும் கண் தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கிறது.

பெருஞ்சீரகத்தில் பைட்டோநியூட்ரியண்ட்கள் காணப்படுகிறது. இது சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடல் எடை குறைப்பிற்கு உதவி புரிகிறது. உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

உடற்பயிற்சிகளும், உணவுகளையும் எடுத்துக் கொண்டு பெருஞ்சீரகத்தை சேர்த்து சாப்பிடும்பொழுது விரைவில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அது சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை தடுக்கிறது. சருமத்தின் அமைப்பு மேம்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகத்தில் முகப்பரு, தோல்வறண்டு போவது, சொறி போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும் தாதுக்களும் அதிகம் காணப்படுகிறது.

பெருஞ்சீரகத்தை உணவுக்குப் பிறகு உங்களுக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்றால் அதை தேநீர் வடிவிலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உணவு பொருட்களிலும் இதை சேர்த்து பயன்படுத்தலாம். ஆகையால் எந்த விதத்திலாவது பெருஞ்சீரகத்தை அதிகம் நீங்கள் உங்களுடைய உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது அது செரிமான பிரச்சனைகள் மற்றும் உடலின் பல விதமான நோய் பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

Related posts

Leave a Comment