September 28, 2022
சினிமா

இந்த மாதம் வெளியாகும் தமிழ் முன்னணி நடிகர்களின் படங்கள்…

இந்த மாதம் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன. அந்த படங்களை பற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம்…

எண்ணித் துணிக:

ஆகஸ்ட் நான்காம் தேதி “எண்ணித் துணிக” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜெய், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் இது. எஸ்.கே. வெற்றிச் செல்வன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். வில்லனாக வம்சிகிருஷ்ணா நடிக்கிறார்.

காட்டேரி:

வைபவ் கதாநாயகனாக நடிக்க, யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய டீகே “காட்டேரி” படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார் ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

குருதி ஆட்டம்:

அதர்வா நடிப்பில் எட்டு தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் படம் “குருதி ஆட்டம்”. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டைரி:

இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் “டைரி”. கிரைம் திரில்லர் ஜோனரில், டைரி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருள்நிதிக்கு ஜோடியாக இப்படத்தில் பவித்ரா நடித்திருக்கிறார்.

யசோதா:

அறிமுக இயக்குனர்களான ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் “யசோதா” படத்தில் நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் பனிரெண்டாம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

விருமன்:

கொம்பன் முத்தையா இயக்கத்தில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கும் படம் “விருமன்”. கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் விருமன் திரைப்படத்தில் கார்த்தியுடன் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் பனிரெண்டாம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

திருச்சிற்றம்பலம்:

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடித்திருக்கும் திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த திரைப்படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதேபோல் அனிருத் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படம் ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பிசாசு 2:

கவுரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் “பிசாசு 2”. இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணா மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் முப்பத்தியொன்றாம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பொம்மை:

எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதாமோகன் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் படம் “பொம்மை”. இந்த படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Related posts

Leave a Comment