September 28, 2022
அறிந்திராத உண்மைகள்

கடலின் ஆழத்தில் 200 மீட்டருக்கும் கீழே இருக்கும் மீன்களுக்கு கண்கள் தெரியாது தெரியுமா?

மீன்கள் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அழகுக்காக மீன்களை பார்ப்பதும் சரி அல்லது அதை ரசித்து ரசித்து சுவைப்பதும் சரி. இப்படி பலருக்கும் பிடித்த மீன்களை பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பார்ப்போம்.

மீன்களை பற்றிய ஆச்சரியமான தகவல்களில் ஒன்று பல மீன் இனங்கள் தங்களுடைய வாழ்நாளில் பாலினத்தை மாற்றும் என கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாரமுண்டி(Barramundi) என்ற ஒரு மீன் இனம் இருக்கிறது. இது வளரும் பொழுது ஆண் மீனாக வளர்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது இனப்பெருக்கம் செய்யும் நேரத்தில் பெண் மீனாக மாறுகிறது.

கடலில் உள்ள மீன்களுக்கு எல்லாம் மிகவும் பெரிதான கண்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கடலின் மேற்பரப்பில் இருந்து 200 மீட்டருக்கும் கீழே வாழக்கூடிய மீன் இனங்களுக்கு கண்கள் இல்லை என சொல்கிறார்கள்.

கடலில் வாழும் கேட்ஃபிஷ் ஆண் மீன்கள் பெண் மீன்கள் முட்டை இட்டவுடன் அந்த முட்டைகளை குஞ்சு பொரிக்கும் வரை தன்னுடைய வாயில் வைத்திருக்கிறது. குஞ்சுகள் பொரித்து வெளிவருவதற்கு பல வாரங்கள் வரை ஆகும். அதுவரைக்கும் அது தன்னுடைய வாயில் வைத்து குஞ்சுகளைப் பாதுகாக்கும்.

பொதுவாக மீன்கள் எல்லாம் நேராக நீந்தும். ஆனால் நைல் நதியில் வாழக்கூடிய கேட்பீஷ் மீன்கள் தலைகீழாக நீந்தும் திறன் கொண்டது.

அமேசான் ஆறுகளில் பனாக்(Panaque) எனப்படும் கெளுத்தி மீன் வகைகள் உள்ளது. இந்த மீன்கள் மரத்தை சாப்பிடுகிறது. இது ஆற்றின் அடிப்பகுதியிலிருக்கும் மரங்களை தன்னுடைய வித்தியாசமான வாய் அமைப்பு மூலமாக சாப்பிடுகிறது.

குர்னார்ட்(gurnard) என்ற ஒரு வித்தியாசமான மீன் உள்ளது. இந்த மீன் தண்ணீரில் நீந்தும். நிலத்தில் நடக்கும். காற்றில் பறக்கும் குணம் கொண்ட வித்தியாசமான ஒரு மீன் இனம் இது.

ஒரு எலக்ட்ரிக் ஈல்(electric eel) மீன் 650 வோல்ட் மின்சாரத்தை உண்டாக்கும் திறன் கொண்டது. இந்த ஆற்றல் மூலமாக 50 கார்களை இயக்க முடியும்.

உலகின் மிகச்சிறிய மீன்கள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பிக்மி கோபி(pygmy goby) மற்றும் லூசன் கோபி(Luzon goby) மீன் இனங்கள். முழுமையாக வளர்ந்த இந்த மீன்கள் ஒன்றரை அங்குலம் நீளம் கொண்டதாக இருக்கும்.

கோல்ட் பிஷ் எனப்படும் தங்க மீனை நாம் பார்த்திருப்போம். இந்த கோல்ட் பிஷ் மீனை இருட்டு அறையில் தொடர்ந்து வைத்திருந்தால் இந்த மீன் வெள்ளை நிறமாக மாறும்.

கொய் மீன்கள்(Koi fish) 200 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் திறன் கொண்டது.

ஒசியன் சன் ஃபிஷ் எனப்படும் மீன் ஒரே நேரத்தில் 50 லட்சம் முட்டைகள் வரை இடும்.

பேரட் பிஷ்(parrotfish) எனப்படும் மீன் தூங்கும்பொழுது தன்னை சுற்றி சளி போன்ற ஒரு அமைப்பை பயன்படுத்தி ஒரு பையை உருவாக்குகிறது. இந்த மீன் தூங்கும் பொழுது மற்ற உயிரினங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இப்படி செய்கிறது.

ஒரு பஃபர் மீன்(Puffer Fish) 30 பேரைக் கொல்லும் அளவுக்கு விஷம் கொண்டுள்ளது.

அட்லாண்டிக் சால்மன் மீன்(Atlantic salmon) தண்ணீரில் இருந்து 4.5 மீட்டர் உயரம் வரைக்கும் குதிக்கும் திறன் கொண்டது.

ஆஸ்திரேலியாவில் கடற்கரையோரத்தில் வாழும் ஸ்டோன் ஃபிஷ் மீன்(stonefish) உலகில் உள்ள மிகவும் நச்சு மிகுந்த மீன் ஆகும். இது 1 வினாடிக்கும் குறைவாக 0.015 வினாடியில் தன்னுடைய இரையை பிடித்து சாப்பிடும்.

மிகவும் மெதுவாக நீந்தும் மீன் கடல்குதிரை. இது சுமார் 0.01 மைல் வேகத்தில் நீந்தும்.

இறால்கள்(shrimp) பிறக்கும்போது ஆணாக பிறக்கிறது. அவை முதிர்ச்சி அடையும் பொழுது பெண்ணாக மாற தொடங்குகிறது.

Related posts

Leave a Comment