November 27, 2022
டெக்னாலஜி

10 ரயில் பெட்டிகளுடன் 42 கார்களை இழுத்து ஃபோர்டு நிறுவன கார் சாதனை!!!!

தற்பொழுது மின்சாரத்தால் இயங்கும் கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. உலகிலுள்ள மிகவும் புகழ்பெற்ற எல்லா கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பதில் மும்மூரம் காட்டி வருகிறது.

அடுத்த மிகப்பெரிய சந்தை எலக்ட்ரிக் கார்களுக்கே என தெரிந்து எலக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி தயாரிக்க அதிக முயற்சி எடுத்து வருகின்றன கார் தயாரிப்பு நிறுவனங்கள்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்று 500 டன் எடையை சோதனை ஓட்டத்தில் இழுத்து சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்று 10 ரயில் பெட்டிகள் மற்றும் 42 கார்கள் என மொத்தம் 500 டன் எடையை 1000 அடி தூரத்திற்கு இழுத்துச்சென்று சாதனை படைத்துள்ளது.

ஃஎப் 150 (F-150) என்று பெயரிடப்பட்டுள்ள பிக் அப் காரான இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த காரின் இழுக்கும் திறன் மற்றும் எடை தாங்கும் திறன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதலில் காலியான 10 ரயில் பெட்டிகளை முதலில் இழுத்தது, பின்னர் ரயில் பெட்டிகளுக்கு 42 கார்கள் வைக்கப்பட்டு அதனை இழுக்க வைக்கப்பட்டது. அதன்படி அந்த கார் 500 டன் எடையை 1000 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment