September 28, 2022
செய்திகள்

தங்கம் விலை திடீர் உயர்வு…! இன்றைய நிலவரம் என்ன ?

தங்கம் விலை கடந்த ஐந்து நாட்களுக்குப்பின் இன்று உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் சவரனுக்கு ரூ.952 குறைந்தநிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூபாய் பதினான்கு உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.112 அதிகரித் துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,626 ஆகவும், சவரன், ரூ.37,008 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூபாய் பதினான்கு அதிகரித்து ரூ.4,640 ஆக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,120 ஆக ஏற்றம் அடைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஐந்து நாளாகச் சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்தது. இதனால் சவரன் ரூ.36ஆயிரத்துக்கும் கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், உலகளவில் அடுத்த ஆண்டு பொருளாதார மந்தநிலை உருவாகும் என்ற உலக வங்கியின் கணிப்பு போன்றவை பங்குச்சந்தையை நேற்று உலுக்கி எடுத்தன. இந்த எதிரொலி தங்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீத அறிவிப்பு முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

அவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு அதிகரிக்கும், இது உலகின் பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கும். அதன்பின் தங்கத்தின் மீதான முதலீடு குறையும். அப்போது, தங்கத்துக்கான தேவை குறைந்து விலை வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

Related posts

Leave a Comment