January 31, 2023
செய்திகள்

தங்கம் விலை தொடர்ந்து மளமளவெனச் சரிவு…! மகிழ்ச்சியில் நடுத்தரக் குடும்பத்தினர்…!

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர்.

தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சரிந்துள்ளது. சரவனுக்கு இருநூற்றி நாற்பத்தியெட்டு ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலை இருநூற்றி ஐம்பத்தியெட்டு ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இது நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு முப்பத்திஒன்று ரூபாயும், சவரனுக்கு இருநூற்றி நாற்பத்தியெட்டு ரூபாயும் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி., கிராம் ரூபாய் 4,947 ஆகவும், சவரன் ரூபாய் 39,576 ஆகவும் இருந்தது.

இருபத்தி இரண்டு காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதாவது செவ்வாய்கிழமை கிராமுக்கு முப்பத்திஒன்று ரூபாய் சரிந்து ரூ.4,916 ஆகவும்., சவரனுக்கு இருநூற்றி நாற்பத்தியெட்டு ரூபாய் குறைந்து ரூபாய் 39328ஆக குறைந்துள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கி நிதிக்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் இருப்பதால், கவனத்துடன் முதலீட்டை கையாள்கிறார்கள்.

இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறைவதால், விலையும் குறைந்து வருகிறது. பெடரல் வங்கியின் அறிவிப்புக்குப்பின், தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலை சவரனுக்கு இருநூற்றி அறுபது ரூபாய் வரை குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறையும்பட்சத்தில் தங்கம் வாங்குவோர் விரைவாக வாங்குவது சிறந்தது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Related posts

Leave a Comment