நியூசிலாந்து நாட்டை புகை இல்லா நாடாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில் புகையிலைக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும்., சிகரெட் புகைப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
அந்நாட்டில் பிரதமர் ஜெசிக்கா ஆர்டென் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்கவும், புகையில்லா தலைமுறையை உருவாக்கவும் அரசு விரிவான திட்டத்தை உருவாக்க சிகரெட் தடை சட்டம் என்ற ஒன்றை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, அந்நாட்டில் 2009-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அல்லது அதற்குப் பின் பிறந்தவர்கள் எவருக்கும் சிகரெட், புகையிலை விற்கக் கூடாது. அதாவது 2008-க்கும் பின் பிறந்தவர்கள் புகையிலை, சிகரெட் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்தபட்ச வயது சட்டம் ஆண்டுகள் கடந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும். எனவே, ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னர், சிகரெட் வாங்குவதற்கு குறைந்தபட்ச வயது அறுபத்திமூன்று வயதாக இருக்கும். அதற்குள் ஒரு தலைமுறையினர் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் மறைந்தே போய்விடும் என்ற நம்பிக்கையில் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளனர்.
இந்த புதிய சட்டத்தின் படி, அந்நாட்டில் சிகரெட், புகையிலை விற்கும் கடைகளின் எண்ணிக்கை 6000-இல் இருந்து அறுநூறாக குறைக்கப்படும். மேலும், புகையிலையில் நிக்கோடின் அளவையும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
புகைபிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடமும் படிப்படியாக குறைத்து 2025-ஆம் ஆண்டுக்குள் புகைபிடிக்க நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
நியூசிலாந்து நாடு போலவே இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் இளைஞர்கள் புகைபிடிக்க தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.