எலிகள் மூலம் உண்டாகும் ஹேன்டா வைரஸ் !!!

மனிதர்களுக்கு நோய்களை உண்டு பண்ணும் ஹேன்டா வைரஸ்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்கலாம்.

மனிதர்களுக்கு நோய்களை உண்டு பண்ணும் ஹேன்டா வைரஸ்கள் எலிகளில் இருந்து உருவாகிறது.

இது பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர், மலம் மற்றும் உமிழ்நீர் வழியாக இது பரவுகிறது.

இந்த ஹேன்டா வைரஸ் நோய்த்தொற்றுக்கு பிறகு சிறுநீரக நோய்க்குறி மற்றும் ரத்தக்கசிவு காய்ச்சல் போன்றவை உண்டாகிறது.

இந்த நோய்க்கு என்று தனிப்பட்ட சிகிச்சை எதுவுமில்லை. மக்கள் எலிகளிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள் .

எப்படி உருவாகிறது?

6 வித்தியாசமான ஹேன்டா வைரஸ்கள் இதுவரை ஐரோப்பாவில் கண்டறியப்பட்டுள்ளது. ஹேன்டா வைரசில் பல இனங்கள் இருக்கின்றன. இவை மரபணுக்கள் கொண்ட மிகச் சிறிய வைரஸ்.

ஒவ்வொரு ஹேன்டா வைரஸ்களும் ஒரு குறிப்பிட்ட இன எலிகளால் பரப்பி விடப்படுகிறது. ஐரோப்பாவில் இந்த ஹேன்டா வைரஸ்கள் மிக வேகமாக பரவி வருகிறது.

பொதுவாக ஏற்படும் பாதிப்பு பூமலா என்ற ஹேன்டா வைரஸால் உண்டாகிறது. இந்த வைரஸ் பேங் வால் என்ற எலிகளின் மூலம் பரவி வருகிறது.

இந்த வைரஸ் இங்கிலாந்தை தவிர மத்திய தரைக்கடல் பகுதிகள், வடக்குப் பகுதிகள் போன்ற பகுதிகளில் ஏராளமாக பரவி வருகிறது.

இந்த எலிகள் தென்கிழக்கு ஐரேப்பாவில் மட்டும் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த ஹேன்டா வைரஸ்கள் அதிகமாக பரவக் கூடியதாக இருக்கிறது.

ஓக் மற்றும் பீச் போன்ற தாவரங்களின் விதைகளை உண்ணும் எலிகள் இங்கு ஏராளமாக உள்ளன.

எனவே இந்த எலிகள் இலையுதிர் காலத்தில் மனித குடியிருப்புகளை ஆக்கிரமித்து ஏராளமான ஹேன்டா வைரஸ் நோய்களை பரப்பி வருகிறது.

​பரவும் விதம்

பேங் வால்ஸ் மற்றும் மஞ்சள் கழுத்து எலிகள் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் ஹேன்டா வைரஸ் பரவுகிறது.

மேலும் எலிகளின் மலம், சிறுநீர் மற்றும் உமிழ் நீரை சுத்தப்படுத்தும் போது இந்த வைரஸ் பரவுகிறது.

எனவே எலிகள் நிறைந்த தூசி படிந்த இடங்கள் நமக்கு ஆபத்து நிறைந்தவையாக மாறுகின்றனர்.

ஆனால் இந்த ஹேன்டா வைரஸ்கள் பெரும்பாலும் மனிதருக்கு மனிதர் பரவுவதில்லை.

காடுகளில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

அறிகுறிகள்

சிறுநீரக நோய்க்குறி (எச்.எஃப்.ஆர்.எஸ்) உடன் ரத்தக்கசிவு காய்ச்சல், தலைவலி, சுவாசக் குழாய் அறிகுறிகள், வயிற்று மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகள் தீவிரமாகும். முக்கியமாக இது ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் பரவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *