January 31, 2023
தகவல்

அனைவருக்கும் பிரியமான பிரியாணியின் வரலாறு – சுவாரசியமான தகவல்கள்

மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான். ட்ரீட் என்றதும் எங்க பிரியாணி டேஸ்டியாக கிடைக்கும் என்றே தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி சுவைப்பதும் பிரியாணியைதான். நகரங்களில் வீதிகள் தோறும் தெருவிளக்கு உண்டோ இல்லையோ, ஒரு பிரியாணிக் கடை இருப்பதை நாம் கண்கூட பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாரசீகத்தின் பாலைவனத்தில் பிறந்த பிரியாணி, இன்று அனைவருக்கும் பிரியமான உணவாக மாறியது எப்படி? என்பதை பற்றி இந்தப்பதிவில் நாம் பார்க்கலாம்…

பிரியாணி தற்போது எல்லோரின் விருப்ப உணவாகும். பிரியாணி என்பது “பிரியாண்” (beryā) என்ற பாரசீக மொழியிலிருந்து வந்தது என குறிப்பிடுகிறார்கள். இதனுடைய அர்த்தம் “fried before cooking”. அதாவது வறுத்து எடுத்த உணவு என்பது அர்த்தமாகும். இந்த பிரியாணி பாரசீக நாடான பெர்சியாவில் முதன் முதலில் தோன்றியது அதாவது தற்போது உள்ள ஈரான் ஈராக் நாடுகளாகும்.

பெர்சியா நாட்டு போர் வீரர்கள் பல இடங்களில் போர் செய்ய பல இடங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது உணவுக்கு பல பிரச்சனை ஏற்படும். இதன் காரணமாக போர் காலத்தில் உணவு இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். ஆனால் போர் வீரர்களுக்கு நல்ல உணவு கொடுத்தால் மட்டுமே அவர்களால் சண்டையிட முடியும்.

அப்போது அவர்கள் காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாட செல்வார்கள். வேட்டையாடிய விலங்கை தோல் நீக்கி அதனை கறியாக மாற்றி, அவர்களிடம் உள்ள மசாலாக்களை வைத்து கறி மேல் தடவி ஊற வைத்து பூமிக்குள் புதைத்து வைத்துவிடுவார்களாம். மீண்டும் விடியற்காலையில் பிறகு ஒரு பெரிய பானையில் அரிசி மற்றும் ஊறவைத்த கறி எல்லாத்தையும் சேர்த்து மூடி தம்மில் வைத்துவிடுவார்களாம். அதாவது அதிக அழுத்ததில் தான் வைத்து வேகவிடுவார்களாம்.இவ்வாறு தான் தம் பிரியாணி(dum biryani) உருவானது.

இந்த பிரியாணியில் முதலில் அரிசி பிறகு ஊறவைத்த கறி பிறகு நன்கு மூடி அதனை பூமிக்கு அடியில் வைத்து தீ மூட்டி வேக விடுவார்கள் இவ்வாறு தான் முதன் முதலில் பிரியாணி உருவாகியது. இதில் விலங்குகளை சமைப்பதால் அதிக நாற்றம் ஏற்படும் என்பதால் அதில் நிறைய பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை பொருள்களை பயன்படுத்தினர்.

பிறகு போருக்கு செல்வதற்கு முன் அதனை சாப்பிடுவர்கள். அந்த உணவை சாப்பிட்டுதான் அவர்கள் போர் செய்தனர். இவ்வாறு பெர்சிய அரசர்கள் மற்றும் மக்கள் இதுபோன்றுதான் கறிகளில் மாசாலா தடவி முதலில் சாப்பிட்டனர் இதுதான் பிரியாணி உருவாக முதல் தொடக்கமாக அமைந்தது.

இந்தியாவிற்கு வந்த பிரியாணி:

போர்வீரர்களின் உணவாக இருந்த பிரியாணியை முதலில் பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலிய அரசர் தைஊர்க்கு இந்தயாவின்மீது படையெடுத்த போதுதான் முகலாயருக்களின் வரலாறு இந்தியாவில் ஆரம்பிக்கிறது. அப்போதிலிருந்து இந்த பிரியாணி என்பது போர்வீரர்களுக்கான உணவாக மட்டுமே இருந்தது. இது அன்றைய காலகட்டத்தில் அரச குடும்பங்களுக்காக உருவாக்கபட்ட உணவுதான் என்று மக்களால் நம்பபட்டது.

பதினாறாம் நூற்றாண்டில் தாஜ்மஹால் கட்டிய ஷாஜகான் மனைவி மும்தாஜ் அவர்கள் போர்வீரர்களை காணும் போது அவர்கள் நல்ல உணவு கிடைக்காததால் சோர்வாக இருந்ததை காண்கிறார் அப்போது மும்தாஜ் அவர்கள் அரச குடும்ப உணவாக இருந்த பிரியாணியை போர்வீரர்களுக்கும் அளிக்குமாறு ஷாஜகானிடம் அனுமதி கேட்டு அவர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. அவர்களுக்கு பிரியாணி செய்யும் முறையை கற்றுகொடுக்கிறார்கள். இவ்வாறாக இந்தியாவில் அரச குடும்ப உணவாக இருந்த பிரியாணி போர்வீரர் உணவாகவ மாறியது. இந்த உணவு போர் வீரர்களுக்கு சத்து தருவதுடன் மக்களுக்கு ஒருவித உற்சாகத்தையும் தருகிறது.

மும்தாஜ் அவர்களால் தான் இப்போது நாம் பிரியாணி சாப்பிடுகிறோம், இவ்வாறு பல இடங்களிலும் பிரியாணி பரவ தொடங்கியது. இவ்வாறு இஸ்லாமியர்கள் எங்கெங்கெலாம் உள்ளார்களோ அங்கெல்லாம் பிரியாணி பரவியது.

இரண்டம் நூற்றாண்டிலேயே பிரியாணி சாப்பிட்டிருப்பதாக நம் தமிழ் நூலான புறநானூற்றில் கூறப்படுகிறது. அப்பொது இந்த பிரியாணி ஊண்சோறு என்ற பெயரில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை விதவிதமான பிரியாணி வகைகள் ருசித்து சாப்பிட கிடைத்துள்ளது. ஆரம்பத்தில், பாரசீகத்தில் காட்டில் வேட்டையாடும் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டதுதான் பிரியாணியாக உருவானது. முதலில் வெறும் மசாலாக்களை மட்டுமே பயன்படுத்திய பாரசீகர்கள், நாளடைவில் நறுமணத்திற்காக பல வாசனைப் பொருட்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இறைச்சியை ஒன்றாக சமைத்து சாப்பிடுவதே பிரியாணி என்ற நிலை மாறி, காய்கறி, முட்டை, இறால் என் பல பொருட்களை வைத்து பிரியாணி செய்யப்படுகிறது.

Related posts

Leave a Comment