November 27, 2022
உடல்நலம்

பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்தும் வீட்டு மருத்துவம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1-2 துண்டு கடுக்காயை சாப்பிட்டால்,
பெண்கள் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும்.
இது மலச்சிக்கலையும் தடுக்கும்.

2-3 உலர்ந்த அத்திப் பழத்தை ஒரு டம்ளர் நீரில் இரவில் படுக்கும் முன் ஊற வைத்து,
மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது யோனியில் ஏற்படும்
பிரச்சனைகள் அனைத்தையும் சரிசெய்யும்.

மாதுளம் பூவை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த மாதுளம் பொடி,
குங்குமப்பூ மற்றும் நாட்டுச் சர்க்கரையை சரிசம அளவில் எடுத்து, ஒரு பாட்டிலில் போட்டு
வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1/2 டீஸ்பூன்
சாப்பிட வேண்டும். ஒருவேளை வெள்ளைப்படுதல் தீவிரமாக இருந்தால், ஒரு நாளைக்கு
2-3 முறை உட்கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு பச்சை வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், லுகோரியா
பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால், வாழைமரத்தின் வேரை 5-6 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து
இறக்கி, வெதுவெதுப்பான பின் அந்நீரில் 20-25 நிமிடம் உட்காருங்கள். இதனால் யோனியில்
ஏற்பட்ட தொற்றுகள் நீங்கும்.

1/2 டீஸ்பூன் சர்பகந்தா பொடியை நீரில் கலந்து குடியுங்கள். இப்படி தொடர்ந்து 4-5 நாட்கள்
குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் இந்த
பொடி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

1/2 டீஸ்பூன் நெல்லிப் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால், வெள்ளைப்படுல் பிரச்சனை நீங்கும்.

வெள்ளைப்படுதல் பிரச்சனையை மருந்து மாத்திரைகளின் உதவியின்றி, இயற்கை வழியிலேயே சரிசெய்ய முடியும்.

Related posts

Leave a Comment