November 27, 2022
டிப்ஸ்

கொசுக்களை உங்கள் வீட்டிலிருந்து ஓட ஓட விரட்டவேண்டுமா ?

சாயம் காலம் 6 மணி முதல் 7மணி வரை அதிக கொசுக்களை பார்க்க முடியும். அந்த கொசுவை விரட்டப் நாம் பல முறைகளைக் கையாள்கிறோம்.

சில சமயங்களில் நாம் உபயோகிக்கும் கொசு விரட்டி மருந்தினால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதை தடுக்க நாம் இயற்கையான மூலிகைகளை உபயோக படுத்தலாம்.அந்த இயற்கை மூலிகைகளை குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எண்ணெய் வாசனை

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும்,கொசுவும் அணுகாது.

மேலும் வேப்ப எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம்.

வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவதும் தெளித்தாலும் கொசு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

செடி வளர்ப்பது

கொசுக்களை விரட்டும் இயற்கை வேதிப் பொருள்கள் நம் பாரம்பரியச் செடிகளில் நிறைந்துள்ளன. உதாரணமாக நொச்சி, வேம்பு ,சாமந்தி போன்ற தாவரங்களுக்கு இந்தக் குணம் உண்டு.

இவை அல்லாது ரோஸ்மேரி, சிட்ரோநெல்லா, ஏஜ்ரேடம் போன்ற செடிகளிலும் இந்தக் குணம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஆக இந்தச் செடிகளை வளர்ப்பதால் நமக்கு இருவிதமான பயன்கள் கிடைக்கும்.வீட்டிற்கு அழகை மட்டுமல்ல வீட்டில் வசிப்பவர்களுக்கு நல் ஆரோக்கியத்தை வழங்கும்.

பச்சிலை தைலம்

வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாகப் பயன்படுத்தலாம்.

அதனுடன் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போடலாம்.

எலுமிச்சைப் பழம்

எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி, அதில் ஆங்காங்கு கிராம்பை நட்டு வைத்தால் இதன் வாசனை கொசுவை விரட்டும்.

கற்பூரவல்லி மற்றும் கற்றாழை

கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்யது கொசுவை விரட்டலாம்.

புதினா இலை

புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளித்தால் இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

யூகலிப்டஸ்

யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.

பூண்டு எண்ணெய்

பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது.

Related posts

Leave a Comment