November 27, 2022
டெக்னாலஜி

இனிமே ரயிலில் பயணம் செய்ய காத்திருக்க தேவையில்லை …புதிய செயலி அறிமுகம் !

நாம் தொலை தூர பயணங்களுக்கு செல்ல பெரும்பாலும் பயன்படுத்துவது ரயில். இதில் பயணம் சென்றால் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல் டிக்கெட் விலையும் மிக குறைவு. ஆனால் நாம் புக் செய்த டிக்கெட் கன்பார்ம் ஆகிவிட்டதா அல்லது வைட்டிங் லிஸ்டில் இருக்கிறதா என்பதை அறிவது மிக கடினம்.  குறிப்பாக, பி என் ஆர் (PNR) ஸ்டேட்டஸை தெரிந்துக்கொள்ள பல்வேறு இணையதளங்களில் தேடவேண்டி உள்ளது.

ஆகவே தற்போது நெட்ஒர்க் அதிகமாக வளர்ந்த நிலையில் ரயில் பயணிகள், தங்களின் பி என் ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் ரயில் வருகை குறித்த தகவல்களை இனி தங்களின் வாட்ஸ் அப்பில் காணும் வசதியை ரயிலோஃபி (Railofy) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி குறித்த விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது ரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான மக்கள் தங்கள் டிக்கெட்களை மொபைல் மூலம் புக் செய்து விடுகின்றனர். ஆனால் அவர்கள் புக் செய்த டிக்கெட் கன்பார்ம் (confirm) ஆகிவிட்டதா அல்லது வைட்டிங் லிஸ்டில் இருக்கிறதா என்பதை அறிவது மிக கடினம். குறிப்பாக, பி என் ஆர் (PNR) ஸ்டேட்டஸை தெரிந்துக்கொள்ள பல்வேறு இணையதளங்களில் தேடவேண்டி உள்ளது. கூகுள் (google) தரவின்படி, ஐ ஆர் சி டீ சி ( IRCTC) பயணி ஒருவர் தங்களின் பயணத்துக்கு முன்பாக பி என் ஆர் ஸ்டேட்டஸ் குறித்த தகவல்களை 10 முதல் 20 முறை சரிபார்ப்பதாக தெரிகிறது.

இதனால் மாதத்துக்கு ஒரு கோடிக்கும் மேலான பி என் ஆர் ஸ்டேட்டஸ் குறித்த தேடல்கள் இடம்பெறுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் அனுபவிக்கும் இத்தகைய சிக்கலை போக்கும் வகையில் மும்பையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரயிலோஃபி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, பயணிகள் தங்களின் பி என் ஆர் ஸ்டேட்டஸ் குறித்த தகவல்களை இனி வாட்ஸ் ஆப் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக தங்கள் முன்பதிவின் தற்போதைய நிலை, லைவ் லொகோஷன், ரயிலின் நிகழ்நேர வருகை உள்ளிட்ட தகவல்களை உங்களின் வாட்ஸ்அப் செயலிக்கு ( Whats app) ரயில்லோஃபி நிறுவனம் அனுப்பி வைக்கிறது. பயணம் செய்யும் பயணிகள், தங்களின் பி என் ஆர் எண்ணை +919881193322 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பினால் போதும். உங்கள் பயணசீட்டின் பி என் ஆர் எண் நிலை சில நிமிடங்களில் வாட்ஸ்அப் செயலிக்கு வந்துவிடும்.

மேலும், பயணிகள் ரயில் நிலையத்தை அடையும்போது நமது நிலையம் வந்துவிட்டது எனவும், அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்த தகவலையும் ரயிலோஃபி தெரிவிக்கிறது. மேலும் பயணி ஒருவர் முன்பதிவு செய்த ரயிலை தவறி விட்டால், நிகழ்நேரத்தில் பயணிக்கும் ரயில்களின் வருகை மற்றும் தாமத நிலை, அந்த ரயிலுக்கான கட்டணம் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் புறப்பட தயாராக இருக்கும் விமானங்கள் குறித்த தகவல்களையும், அதன் டிக்கெட் விலையையும் ரயில்லோஃபி ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதன்மூலம், டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் பயணிகள் மிகுந்த பயனை அடைவார்கள் என ரயில்லோபி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து ரயிலோஃபி ஆப் நிறுவனர்களில் ஒருவரான ரோஹன் தெதியா கூறும் போது “இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களின் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் நிலையை அறிந்து கொள்வதில் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர் என்பதை உணர்ந்தோம். அந்த சிக்கலை தீர்ப்பதுடன், பயணிகளுக்கு எளிமையாக ரயில் டிக்கெட் குறித்த தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என திட்டமிட்டு இத்தகைய முயற்சியை எடுத்தோம் என்றார். இந்த செயலியை தற்போது ஏராளமானோர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment