May 30, 2020
செய்திகள்

கொரோனா வைரஸ் வராம இருக்க உங்க ஸ்மார்ட்போனை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா?

நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவிவரும் நிலையில், ஸ்மாட்போனில் கொரோனா வைரஸ் வருமா? வந்தால் அவை எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்? இது வராமல் இருக்க ஸ்மார்ட்போனை எப்படி சுத்தம் செய்வது என்றும் இது குறித்து ஆய்வுகள் என்ன கூறுகின்றன என்பதை குறித்தும் பார்க்கலாம்.

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் ஸ்டீல் மற்றும் கடினமான பிளாஸ்டிக் போன்ற மேற்பரப்புகளில் மூன்று நாட்கள் வாழும் என்று கண்டறிந்துள்ளது. அட்டை மேற்பரப்பில் சுமார் 24 மணிநேரமும், தாமிரத்தில் சுமார் 4 மணி நேரமும் வாழும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் முன்புறத்தில் கண்ணாடி பேனலுடன் வருவதால், கொரோனா வைரஸ் ஒரு ஸ்மார்ட்போனில் 96 மணிநேரம் அதாவது நான்கு நாட்கள் வரை கண்ணாடி மீது இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் என் ஐ எச்( NIH) ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் தவிர, கண்ணாடி மேற்பரப்பு கொண்ட ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், டேப்லெட்,  மடிக்கணினி போன்ற அனைத்து பொருள்களிலும் வரலாம்.

நாம், அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். உங்கள் ஸ்மார்ட்போனை, ஈரமான மைக்ரோஃபைபர் துணியால் மேற்பரப்பைத் துடைக்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் உள்ள ஓலியோபோபிக் கோட்டிங் இவற்றை அழிக்கக்கூடும் என்பதால், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான கிருமிநாசினி திரவங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

அதற்கு பதிலாக நீங்கள் ஸ்க்ரீன் ப்ரொடக்டர் (screen protector) -ஐ இன்ஸ்டல் செய்யலாம், இதனால் டிஸ்பிளே கோட்டிங் சேதமடையாது.

ஐபோன் சாதனத்தை, 70 சதவிகித ஐசோபிரைல் ஆல்கஹால் துடைப்பான் மற்றும் க்ளோராக்ஸ் கிருமிநாசினி துடைப்பான்களைப் பயன்படுத்தி வெளிப்புற மேற்பரப்புகள் போன்வற்றை துடைக்கலாம்.

ப்ளீச் பயன்படுத்த கூடாது. போனை திறக்கும் போது, ஈரப்பதம் ஆவதை தவிர்க்கவும். ஆப்பிள் தயாரிப்பை சுத்தம் செய்ய யாரிடமும் கொடுக்காதீர்கள். துணி அல்லது தோல் மேற்பரப்பை பயன்படுத்த வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Related posts

Leave a Comment