September 28, 2022
அழகு குறிப்புகள்

குறைந்த செலவில் ஒரே நாளில் முகத்தை வெண்மையாக்குவது எப்படி?

இந்த நவீன காலத்தில் முகத்தை அழகுப்படுத்துவதற்காக பலரும் ஏராளாமான பணத்தை செலவிடுகின்றனர். அழகு நிலையங்களுக்கு சென்று பலவிதமான பேஸ் பேக்குகளை முகத்தில் அப்ளை செய்கின்றனர்.

ஆனால் பண செலவில்லாமல் இயற்கையான முறையில் எளிமையாக முகத்தை எப்படி அழகு செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையானப் பொருள்கள் :

தக்காளி – 1
மஞ்சள் – 1 தேக்கரண்டி
சீனி – சிறிதளவு
எலுமிச்சை பழம் – 1

செய்முறை :

தக்காளி உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருவது மட்டுமல்லாமல் முகத்தை அழகு படுத்தவும் உதவுகிறது. முதலில் தக்காளி பழத்தை நேராக கட் பண்ணி அதில் பாதி பழத்தை எடுத்து நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சளில் கட் பண்ணி வைத்திருக்கும் பகுதி படுமாறு நன்கு முக்கி எடுத்து அதை உங்கள் முகத்தில் வட்டமாக தடவுங்கள்.

இதை கண் கருவளையங்கள் இருக்கும் இடங்களிலும் நன்கு தடவுங்கள். இப்படி 10 நிமிடங்களுக்கு மென்மையாக தடவுங்கள். இதனால் உங்கள் முகத்தில் மஞ்சள் படும். இது நாம் எலுமிச்சை உபயோகப்படுத்தும் போது போய் விடும்.

ஆகவே இது குறித்து கவலை வேண்டாம். இப்படி நீங்கள் 10 நிமிடங்கள் செய்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவுங்கள். அதன்பின் ஒரு பவுலில் சிறிதளவு சீனி எடுத்து அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடுங்கள்.

அதன்பின் மீதம் இருக்கும் பாதி தக்காளி பழத்தை எடுத்து அதை இந்த சீனியில் நன்கு படுமாறு முக்கி எடுத்து நாம் முதலில் செய்தது போல உங்கள் முகத்தில் வட்டமாக தடவுங்கள்.

இப்படி நாம் 10 நிமிடங்கள் செய்யும் போது முகத்தில் காணப்படும் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாகவும் பளப்பளப்பாகவும் மாறும். மேலும் முதலில் நாம் உபயோகப்படுத்தின மஞ்சள் முகத்தில் படித்திருந்தாலும் அதுவும் மறைந்து விடும்.

நாம் இயற்கையாக பயன்படுத்தக்கூடிய இந்த மஞ்சளில் இருக்கும் ஆண்டி பாக்ட்டீரியல் தன்மைகள் மற்றும் எலுமிச்சம் பழத்தில் இருக்கும் சத்துக்கள் ஆகியவை முகத்தில் காணப்படும் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் ஆகியவற்றை போக்கி நல்ல பொலிவை தந்து முகம் வெண்மையாக மாறும்.

இப்படி நீங்கள் வாரத்தில் மூன்று நாள்கள் செய்து பாருங்கள் நல்ல மாற்றதை பார்க்க முடியும்.

Related posts

Leave a Comment