November 27, 2022
சமையல்

சாக்லேட் சாண்ட்விச் வீட்டிலேயே செய்வது எப்படி…?

தற்போது சாண்ட்விச் பலரது காலை மற்றும் மாலை நேர உணவாகவும் நல்ல ஸ்நாக்ஸாகவும் உள்ளது. சாண்ட்விச்சில் பல வெரைட்டிகள் உள்ளன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சாண்ட்விச் தான் சாக்லேட் சாண்ட்விச். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, வயிற்றையும் நிரப்பும். நீங்கள் இதுவரை சாக்லேட் சாண்ட்விச்சை கடைகளில் தான் சாப்பிட்டுள்ளீர்கள் என்றால், இனிமேல் அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

பிரட் – 4 துண்டுகள்
டார்க் சாக்லேட் துண்டுகள் – 4 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.

பின் பிரட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.

இதேப் போன்று மற்ற இரண்டு பிரட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்திவிட்டு, பிரட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இதேப் போல் ஒவ்வொன்றையும் டோஸ்ட் செய்து எடுத்து கொண்டால், சுவையான சாக்லேட் சாண்ட்விச் தயார்.

Related posts

Leave a Comment