November 27, 2022
சமையல்

மிக குறைவான நேரத்தில் வெள்ளரிக்காய் ரொட்டி சுவையாக எப்படி தயாரிப்பது?

விதவிதமா சமையல் செய்து கொடுக்கும் தாய்மார்களுக்கு இன்றைக்கு என்ன செய்து கொடுப்பது என்று ஒரே குழப்பமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ரவையில் ரொட்டி செய்து கொடுத்துப்பாருங்க உங்கள் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவாங்க.

இதை தயாரிக்க நீங்கள் கஷ்ட படவேண்டிய தேவையில்லை. இதை எளிமையான முறையில் எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

ரவை மாவு – 1 கப்
துருவிய வெள்ளரிக்காய் – 1 1/2 கப்
தேங்காய் பொடி – 3/4 கப்
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு நறுக்கியது
பச்சை மிளகாய் – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலாவது துருவிய வெள்ளரிக்காய், ரவை, தேங்காய், கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பருவத்திற்கு கொண்டு வர வேண்டும்.

அதன்பின் இந்த மாவினை சப்பாத்தி செய்வதற்கு சிறு உருண்டைகளாக உருட்டுவது போல உருட்டி வைத்து அதனை சப்பாத்தி கல்லில் வைத்து ரொட்டி போல வட்டமாக அழுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன்பின் மிதமான தீயில் வைத்து ரொட்டியை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாகும் வரை 5 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சுவையான ரொட்டியுடன் உங்க விருப்பத்துக்கேற்ப குளம்பு வகைகளை வைத்து சாப்பிடுங்க.

Related posts

Leave a Comment