September 28, 2022
சமையல்

சுவையான பாம்பே சாம்பார் செய்வது எப்படி ?

மராத்தியர்களின் உணவான சாம்பார், தமிழ்நாட்டில் கிபி 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் மராத்திய அரசு காலத்தில் அறிமுகமானது.

சரி இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அதனுடன் சேர்த்து சாப்பிட பாம்பே சாம்பார் என்று அழைக்கப்படும் பாம்பே சட்னியை செய்யுங்கள்.

இந்த பாம்பே சாம்பார் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதுடன், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 10(பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – இரண்டு(பொடியாக நறுக்கியது)

தண்ணீர் – ஒன்றரை கப்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி – ஒரு சின்ன துண்டு

தக்காளி – ஒன்று(பொடியாக நறுக்கியது)

பூண்டு – ஐந்து பல்(பொடியாக நறுக்கியது)

கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்

வெல்லம் – முக்கால் டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு:

எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

வரமிளகாய் – ஒன்று

உப்பு – சுவைக்கேற்ப

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் கடலை மாவை நீரில் சேர்த்து கட்டிகள் சேராதவாறு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

ஒரு வேளை தக்காளி முற்றிலும் வற்றியதாக தோன்றினால், அதில் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், கடலை மாவை சேர்த்து கிளறி சுமார் நான்கு முதல் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்த மல்லியைத் தூவினால், சுவையான பாம்பே சாம்பார் ரெடி.

Related posts

Leave a Comment