September 28, 2022
சமையல்

சுவையான பேரிச்சம் பழ கேசரி செய்வது எப்படி ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான ஆரோக்கியமான சத்தான பேரிச்சம் பழ கேசரி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்…

தேவையான பொருள்கள்:

பேரீச்சம் பழம் – 10

டூட்டி புருட்டி – 50 கிராம்

ரவை – ஒரு கப்

சர்க்கரை – இரண்டு கப்

வெண்ணிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்

முந்திரி, கிஸ்மிஸ் – சிறிதளவு

நெய் – மூன்று ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு சர்க்கரை போட்டு நன்கு கரைத்து கொள்ளவும்.

பிறகு அதனை கொதிக்க வேண்டும். கொதி வந்தவுடன் அதில் பேரிச்சம் பழம், முந்திரி, கிஸ்மிஸ், டூட்டி புருட்டி போன்றவற்றை போட்டு பின்னர் அதில் ரவையை போட்டு கிளறவும்.

இடை இடையே சிறிது சிறிதாக நெய்யை ஊற்றவும்.

ரவை நன்றாக வெந்து கேசரி பதத்திற்கு வந்தவுடன் வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும். சுவையான பேரிச்சம் பழ கேசரி ரெடி.

Related posts

Leave a Comment