August 18, 2022
சமையல்

சுவையான பழ கேசரி செய்வது எப்படி?

பழ கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா விதமான பழங்களையும் பயன்படுத்தலாம். வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளிப்பழம், சப்போட்டா மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த சுவையான பழ கேசரி செய்வது எப்படி என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்

சர்க்கரை – 1 கப்

பழத்துண்டுகள் – 1 கப்

நெய் – மூன்று முதல் ஐந்து டேபிள் ஸ்பூன் வரை

முந்திரிப்பருப்பு – 8

உலர்ந்த திராட்சை – 10

ஏலக்காய் – அரை டீஸ்பூன்

கேசரி பவுடர் – சிறிதளவு

செய்முறை:

பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப் ரவாவிற்கு, ஒன்று முதல் ஒன்றரை கப் வரை பழத்துண்டுகளைச் சேர்க்கலாம்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து தனியாகவைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் பழத்துண்டுகளைப்போட்டு, சிறு தீயில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, அதில் ரவாவைக் கொட்டி ஓரிரு நிமிடங்கள் வறுத்து, இறக்கி வைக்கவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவாவைக் கொட்டிக் கிளறவும்.

ரவை வெந்தவுடன், சர்க்கரையை சேர்த்துக்கிளறவும். சிறிது பாலிலோ அல்லது நீரிலோ கேசரி பவுடரைக் கரைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும்.

பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், சிறிது நெய் ஆகியவற்றைச் சேர்த்துக்கிளறவும்.

கேசரி சற்று கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வர ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய்த் தூள் ஆகிய வற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். சுவையான பழ கேசரி ரெடி…

Related posts

Leave a Comment