September 28, 2022
சமையல்

சுவையான பூண்டு நூடுல்ஸ் செய்வது எப்படி ?

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மதிய வேளையில் பள்ளி கூடத்திற்கு சாதம்,கொடுத்து அனுப்பினால், சாப்பிடாமல் அப்படியே திரும்ப கொண்டு வரும்.

குழந்தைகளுக்கு மதிய வேளையில் சாப்பிடுமாறு, அவர்களுக்கு இந்த பூண்டு நூடுல்ஸ் செய்து கொடுத்தால், டிபன் பாக்ஸ் காலியாகத்தான் திரும்ப வரும். இதை மாலைவேளையிலும் செய்து கொடுக்கலாம்.

இத்தகைய பூண்டு நூடுல்ஸை எவ்வாறு சமைக்கலாம் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – 1 பாக்கெட்

பூண்டு – 10 பற்கள்

பச்சை மிளகாய் – 3(நறுக்கியது)

வெங்காயம் – 2(நறுக்கியது)

கேரட் – 1(நறுக்கியது)

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நூடுல்ஸை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும்,

நூடுல்ஸை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் வேக வைத்து இறக்கி,

நீரை வடித்து விட்டு, பின் குளிர்ந்த நீரால் நூடுல்ஸை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் தூள், வெங்காயம், பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி மூன்று முதல் ஐந்து நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் சோயா சாஸ் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து வதக்கி இறக்கினால், சுவையான பூண்டு நூடுல்ஸ் ரெடி…

Related posts

Leave a Comment