September 28, 2022
சமையல்

சுவையான ஆட்டு ஈரல் வறுவல் செய்வது எப்படி ?

ஆட்டு ஈரல் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சுவையான உணவு. ஆட்டு ஈரல் மென்மையாக இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

நல்லெண்ணெயில் ஆட்டு ஈரல் வறுவல் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். இந்த பதிவில் சுவையான ஆட்டு ஈரல் வறுவல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஈரல் – 500 கிராம்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – இரண்டு

வர மிளகாய் – நான்கு

மிளகுத் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன்

கறிவேப் பிலை – இரண்டு கொத்து

நல்லெ ண்ணை – இரண்டு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஆட்டு ஈரலை போடவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப் பிலை, பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

அதன் பின் அடுப்பை பற்ற வைக்க வேண்டும். அப்பொழுது சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.

அப்பொழுதுதான் ஈரலானது இறுகலாக இல்லாமல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.

பின்னர் வர மிளகாய் கிள்ளிப் போட்டு மிளகு தூள் தூவி லேசாக தண்ணீர் விடவும். மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

அவ்வப்போது கரண்டி போட்டு கிளற வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

கடைசியில் அதன் மீது கொத்த மல்லிதழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் ரெடி.

Related posts

Leave a Comment