November 30, 2022
சமையல்

குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான ஆட்டுக்கறி கோலா உருண்டை செய்வது எப்படி ?

ஆட்டுக்கறியை வைத்து எப்போதும் குழம்பு, பிரியாணி என்று சிலவற்றை மட்டும் செய்வதை விட, புதுவிதமாக குழந்தைகளுக்கு ஆட்டுக்கறி கோலா உருண்டைகளை செய்துக் கொடுக்கலாம்.

ஆட்டுக்கறியில் புரதச்சத்து நிறைந்து உள்ளது. மேலும் அதில், வைட்டமின் மற்றும் கனிமச் சத்து உள்ளிட்ட சத்துகள் காணப்படுகிறது. இந்த ஆட்டுக்கறி கோலா உருண்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருள்கள்:

ஆட்டுக் கொத்துக்கறி – 300 கிராம்(எலும்பு இல்லாத ஆட்டுக்கறி)

வெங்காயம் – எண்

பொட்டுக்கடலை – இரண்டு மேசைக்கரண்டி

சோம்பு – ஒரு தேக்கரண்டி

மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி

கரமசாலாத்தூள் – ஒரு தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

கருவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் சற்று வதங்கியவுடன், ஆட்டுக் கொத்துக்கறியை சேர்க்க வேண்டும். அதனுடன், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரமசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்பு, உப்பு மற்றும் மல்லித்தழை தூவி, தண்ணீர் ஏதும் சேர்க்காமல் கறியை பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.

ஆட்டுக்கறியில் இருந்து தண்ணீர் வந்தால், அந்த நீரை வடிகட்டிவிட்டு ஆட்டுக்கறியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஆட்டுக்கறி ஆறியதும், அதை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த ஆட்டுக் கறியுடன் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதோடு, பொட்டுக் கடலையை அரைத்து சேர்க்க வேண்டும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

விருப்பப்பட்டால், மேலும் சிறிது மல்லித்தழையைச் சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த ஆட்டுக்கறியை சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் உருண்டைகளை பொரிப்பதுக்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அது சூடேறியதும், உருண்டைகளைச் சேர்த்து பொரித்து எடுத்தால் ஆட்டுக்கறி கோலா உருண்டைகள் ரெடி.

Related posts

Leave a Comment