August 18, 2022
சமையல்

சுவையான மில்க் கேசரி செய்வது எப்படி ?

மாலையில் பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடுகிற மாதிரி இனிப்பு செய்து கொடுத்து அசத்த விரும்புகிறீர்களா? அப்படி என்றால் இந்த சுவையான சுவையான சத்தான மில்க் கேசரி செய்துகொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

பால் – 200 மில்லி லிட்டர்

சர்க்கரை – 100 கிராம்

ஏலக்காய் – 7

வெள்ளை ரவை – 100 கிராம்

நெய் – 30 மில்லி

முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்

கிஸ்மிஸ் – 2 டேபிள்ஸ்பூன்

பாதாம் பருப்பு – 2

பிஸ்தா – 2

செர்ரி பழம் – 2

செய்முறை:

வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நிறம் மாறாமல் சிம்மில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

மற்றொரு வாணலியில் பால் சேர்த்து காய்ச்சியதும் வறுத்த ரவை, தட்டிய ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

கேசரிக்கு நிறம் வேண்டு மென்றால், பாலுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூவைச் சேர்க்கலாம்.

பால் வற்றி ரவை வெந்த பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகி,

கேசரி பதத்துக்கு ரவை வந்த பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

இதில் பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரியை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Related posts

Leave a Comment