August 18, 2022
சமையல்

ஆரோக்கியமான ஓட்ஸ் காய்கறி சூப் செய்வது எப்படி ?

வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்களுக்கு வலுசேர்க்கும் இந்த ஓட்ஸ் காய்கறி சூப். உடல் இளைக்க மிக சிறந்த உணவு இது. அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சூப்பை எப்படி செய்வது என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – அரை கப்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

சோம்பு – கால் டீஸ்பூன்

பிரிஞ்சி இலை – ஒன்று

கேரட், பீன்ஸ், குடை மிளகாய், கோஸ் – அரை கப்(பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – ஒன்று

உப்பு – தேவைகேற்ப

கரிவேபில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

தேங்காய் பால் – நான்கு டீஸ்பூன்

மிளகு தூள் – கால் டீஸ்பூன்

தண்ணீர் – மூன்று கப்

செய்முறை:

ஒரு கடாயில் ஓட்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரிஞ்சி இலை, கேரட், பீன்ஸ், கோஸ், குடை மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வறுத்த ஓட்ஸ், தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கவும்.

பிறகு, கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து மூடி வேக விடவும். வெந்ததும் இறக்கி மிளகு தூள், தேங்காய் பால், கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும். ஆரோக்கியமான ஓட்ஸ் காய்கறி சூப் ரெடி.

Related posts

Leave a Comment