January 31, 2023
அழகு குறிப்புகள்

கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தரும் இயற்கை ஷாம்பு வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் மிகவும் அழகு சேர்ப்பது முடி. இந்த முடியை பராமரிக்க பலரும் தங்கள் கையில் கிடைக்க கூடிய ஷாம்பு வகைகளை எல்லாம் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் செயற்கை ஷாம்பு வகைகளை பயன்படுத்துவதை பார்க்கிலும் இயற்கையான ஷாம்பு மிகவும் சிறந்தது. இந்த இயற்கை ஷாம்புவை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

வெந்தயம் – அரை கப்

சிகைக்காய் – 1 கப்

பூந்திகொட்டை – 150 கிராம்

நெல்லி முள்ளி – அரை கப்

வெந்தயம்

எண்ணெய் பசை உடைய கூந்தலை கொண்டவர்களுக்கு வெந்தயம் மிக சிறந்தது. மேலும் இது முடிக்கு தேவையான ஊட்டசத்தை கொடுத்து முடியை கருமையாக்கும் தன்மைகொண்டது. மேலும் முடியை பளபளப்பாக்கி எண்ணெய் தன்மை நீக்குவதோடு வறட்சி இல்லாமலும் வைத்திருக்க உதவுகிறது.

​பூந்திகொட்டை

நாட்டு மருந்து கடைகளில் பூந்தி கொட்டைகள் அதிகமாக கிடைக்கும்.
இது கூந்தலுக்கு பொலிவையும் பளப்பளப்பையும் தரக்கூடியது.
பூந்திகொட்டையை இடித்து உள் இருக்கும் கொட்டைகளை நீக்கி இரவு முழுவதும் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.

நெல்லி முள்ளி

நெல்லி முள்ளி என்பது நெல்லிக்காய். அதாவது நெல்லிக்காயை கொட்டை நீக்கி வெயிலில் உலர்த்தி நன்றாக காயவைக்கவும். இவை உலர்ந்து கருமையாவதே நெல்லி முள்ளி எனப்படுகிறது.

வைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காயை சருமம், கூந்தல் எண்ணெய், கூந்தல் ஹேர் டை என அனைத்து பொருள்களையும் தயாரிக்க பயன்படுத்தலாம். இது இளநரையை போக்க கூடியது . மேலும் முடியை கருமையாக வைக்கவும், கூந்தல் நன்றாக வளரவும் உதவி செய்கிறது.

சிகைக்காய்

கூந்தல் அடர்த்தியாகவும், வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதே நாம் அனைவரும் விரும்புவது. அதற்கு மிகவும் உதவுவது சீயக்காய். இது தலையில் இருக்கும் அழுக்கு மற்றும் பூஞ்சையை நீக்க கூடியது . மேலும் எந்தவிதமான கூந்தல் பிரச்சனையும் வராமல் தடுக்க கூடியது.

தயாரிக்கும் முறை:

பூந்திக்கொட்டையை இரவு முழுவதும் ஊறவைத்தது போன்று வெந்தயம், சிகைக்காய், நெல்லி முள்ளி மூன்றையும் ஊறவைத்து விடுங்கள்.

அடுத்தநாள் பூந்திகொட்டை ஊறவைத்த பாத்திரத்திலிருந்து பெரிய வாயகன்ற பாத்திரத்தில் மாற்றி அனைத்தையும் ஒன்றாக்கி வையுங்கள்.

அதனப்பிறகு இவைகளை சிறு தீயில் வைத்து நன்றாக அழுத்தி கொடுத்து அதை வேகவிடுங்கள். அதனை கரண்டி கொண்டு கலக்கும் போதே நுரைத்து பொங்கும்.

எனினும் நன்கு காயும் போது சிகைக்காய், வெந்தயம், நெல்லி முள்ளி போன்றவை மசிய தொடங்கும்.மசிந்த பிறகு வைத்த நீர் நான்கில் ஒரு பாகமாக சுண்டும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிடுங்கள்.

சில மணி நேரம் கழித்து பார்த்தால் கலவை அடியில் தங்கியிருக்கும். மேலாக வடிகட்டி பாட்டிலில் ஊற்றி விடுங்கள். இப்போது ஆர்கானிக் ஷாம்பு ரெடி. மீதம் இருக்கும் கலவையை மேலும் கையால் மசித்து பிழிந்து வெளியேற்றுங்கள்.

இந்த ஆர்கானிக் ஷாம்புவை இரண்டு மாதங்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இதனை ஒரு மாதம் பயன்படுத்தினாலே முடியில் நல்ல ஒரு மாற்றத்தை உணரலாம்.

Related posts

Leave a Comment