November 27, 2022
டிப்ஸ்

வீட்டிலேயே மேக்கப் பிரெஷ் சுத்தம் செய்யும் லிக்குவிட் தயாரிப்பது எப்படி ?

இந்த காலத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் மேக்கப் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். மேக்கப் பண்ணுவதற்கு பல விதமான பொருள்களை கடைகளில் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.

அப்படி உபயோகப்படுத்தும் பொருளில் ஒன்று தான் பிரெஷ். நாம் பயன்படுத்தும் இந்த பிரெஷ்களை மாதத்தில் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் அடிக்கடி நாம் இதை பயன்படுத்துவதால் இந்த பிரெஷ்களில் படிந்திருக்கும் கெமிக்கல்கள் முகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஆகவே இந்த பிரெஷ்களை சுத்தம் செய்ய உதவும் லிக்குவிட் வீடுகளில் எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

நாம் மேக்கப் அப்ளை செய்ய பயன்படுத்தும் பிரெஷ்களை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இதை செய்வதற்க்கு தேவையான பொருள்கள் விட்ச் ஹசல் (Witch hazel) 1/4 கப், லிக்குவிட் காஸ்டல் சோப் (Liquid castile soap) 1 டீ ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1/2 டீ ஸ்பூன், டிஸ்டில்டு வாட்டர் (Distilled water) – 1/2 கப்

எப்படி செய்வது :

விட்ச் ஹசல், காஸ்டல் சோப், ஆலிவ் எண்ணெய், டிஸ்டில்டு வாட்டர் ஆகிய அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கி அதை காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள்.

எப்படி பயன்படுத்துவது:

பிரெஷ்களில் லிக்குவிட் படும்படி நன்கு தெளிக்க வேண்டும். அதன்பின் அதை காட்டன் அல்லது பருத்தி துணியை பயன்படுத்தி துடைக்க வேண்டும்.

அதன்பின் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்தபின் ஈரப்பதம் காயும் வரை காற்றோட்டமான இடத்தில் வைத்து பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

Related posts

Leave a Comment