சமையல்

அட்டகாசமான சுவையில் நாவில் நீர் ஊறச் செய்யும் பட்டர் சிக்கன் மசாலா செய்வது எப்படி ?

அசைவ பிரியர்கள் அனவைருக்கும் பிடித்த உணவு வகைகளில் முதலிடத்தில் இருப்பது எதுவென்றால், சிக்கன் வகை உணவுகள்தான்.

சிக்கன் வைத்து சிக்கன் பாப்கான், சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் லாலி பாப், சிக்கன் பிரியாணி, சிக்கன் மன்ச்சூரியன் என்று சிக்கன் வைத்து எதை செய்து கொடுத்தாலும், அதை அப்படியே சத்தமில்லமல் சாப்பிடுவார்கள் அசைவப்பிரியர்கள்.

அந்த வகையில் இன்று நாம் அட்டகாசமான சுவையில் சிக்கன் ரெசிப்பிகளில் ஒன்றான பட்டர் சிக்கன் மசாலா எப்படி சுவையாக செய்யலாம் என்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ

பெரிய வெங்காயம் – மூன்று

தக்காளி – நான்கு

தயிர் – 200 மிலி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்

மிளகாய்த்தூள் – இரண்டு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

சீரகத்தூள் – அரை ஸ்பூன்

கரம் மசாலா – அரை ஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

பட்டர் – ஐம்பது கிராம்

முந்திரி பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்

கஸ்தூரி மேத்தி – ஒரு ஸ்பூன்

சிவப்பு நிறம் – அரை ஸ்பூன்

பட்டை – ஒரு இன்ச்

கிராம்பு – மூன்று

ஏலக்காய் – இரண்டு

பிரெஷ் கிரீம் – இரண்டு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் நாம் சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து விட்டு, நன்றாக அலசிக் கொள்ளவேண்டும்.
பின் தண்ணீரை வடிகட்டி கொண்டு, ஒரு விலாசமான பாத்திரத்தில் கெட்டி தயிர், உப்பு, கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி மற்றும் சிவப்பு நிறம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

தக்காளியை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து தக்காளி விழுது எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் உள்ள தயிர் கலவையில் கழுவி வைத்துள்ள சிக்கன் பீஸ்களை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட அதாவது சுமார் இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் ஊற வைத்த சிக்கன் மற்றும் தண்ணீர் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இரண்டு விசில் வரும் வரை சிக்கனை வேக வைக்க வேண்டும்.

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் பட்டர் சேர்த்து, பட்டர் உருகிய பின், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்ததாக தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

பின் அதில் மஞ்சள்தூள். மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் வேக வைத்து எடுத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அது நன்றாக கொதித்த பிறகு, முந்திரி விழுது சேர்த்து இறக்க வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதன் மேல் சிறிது பிரெஷ் கிரீம் ஊற்றி கார்னிஷ் செய்தால், அட்டகாசமான சுவையில் நம் நாவில் நீர் ஊறச் செய்யும் பட்டர் சிக்கன் மசாலா ரெடி…!

இந்த பட்டர் சிக்கன் தோசை, நாண், புல்கா, பரோட்டா என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் வகையில் அட்டகாசமான சுவையாக இருக்கும். இதனை குழந்தைகள் முதல் இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Related posts

Leave a Comment