September 28, 2022
சமையல்

வீட்டிலேயே சுவையான பீட்சா தோசை செய்வது எப்படி ?

பொதுவாக பீட்சா சுவையான உணவாக இருந்தாலும், ஆரோக்கியமற்றது. ஆனால் இந்த பீட்சாவை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்யலாம். அதுவும் தோசை மாவைக் கொண்டு ஆரோக்கியமான பீட்சாவை வீட்டிலேயே செய்யலாம். இந்த பீட்சா தோசை உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

தோசை மாவு – ஒரு கப்

குடைமிளகாய் – கால் கப்(நீளமாக கீறியது)

வெங்காயம் – இரண்டு டேபிள் ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)

வேக வைத்த ஸ்வீட் கார்ன் – கால் கப்

பீட்சா சாஸ் – இரண்டு டேபிள் ஸ்பூன்

சீஸ் – கால் கப்(துருவியது)

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

சில்லி ப்ளேக்ஸ் – ஒரு சிட்டிகை

ஆரிகனோ – ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், இரண்டு கரண்டி தோசை மாவை தோசைக்கல்லில் ஊற்றி, அதைப் பரப்பாமல், அதைச் சுற்றி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து குறைவான தீயில் சிறிது நேரம் தோசையை வேகவைக்க வேண்டும்.

பின்பு தோசையின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் பீட்சா சாஸை பரப்பி, அதன் மேல் வெங்காயம், குடைமிளகாய், ஸ்வீட் கார்ன் தூவி, இறுதியாக துருவிய சீஸை பரப்பி விட்டு ஒரு நிமிடம் மூடி வைத்து, சீஸ் உருக வேக வைக்க வேண்டும்

பின் மூடியைத் திறந்து, அந்த தோசையை அப்படியே ஒரு தட்டில் எடுத்து வைத்து, அதன் மேல் சில்லி ப்ளேக்ஸ், ஆரிகனோ தூவினா சுவையான பீட்சா தோசை ரெடி.

Related posts

Leave a Comment