November 27, 2022
சமையல்

அட்டகாசமான முறையில் சூப்பரான சைனீஸ் ஸ்பைசி நண்டு மசாலா செய்வது எப்படி ?

நாம் அனைவரும் நண்டினை வைத்து சூப், கிரேவி, குழம்பு என்று பல வகையான உணவுகளை சுவைத்திருப்போம். ஆனால் இன்று நாம் சைனீஸ் முறையில் காரசாரமான ஸ்பைசி நண்டு மசாலா செய்ய உள்ளோம் இந்த பதிவின் மூலமாக ஸ்பைசியான நண்டு மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்…

தேவையான பொருட்கள்:

நண்டு – அரை கிலோ

முட்டை – ஒன்று

தக்காளி – ஒரு கப் பொடியாக நறுக்கியது

மிளகாய் விழுது – இரண்டு ஸ்பூன்

பூண்டு – ஐந்து பற்கள்

அஜினோமோட்டோ – ஒரு சிட்டிகை

கார்ன் பிளார் – இரண்டு ஸ்பூன்

சர்க்கரை – ஒரு ஸ்பூன்

வினிகர் – இரண்டு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் நண்டை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பூண்டினை மிகப் பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.

தக்காளியை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வர மிளகாயை வெதுவெதுப்பான தண்ணீரில் சுமார் இருபது நிமிடங்கள் ஊற வைத்துக் கொண்டு, விதைகளை நீக்கி விட்டு தோல்களை மாட்டும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடான பின் பொடியாக நறுக்கிய பூண்டினைப் சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பின் அதில் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும்.

தண்ணீர் கொதிக்கும் போது அதில் சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள நண்டுகளைப் போட்டு வேகவிட வேண்டும்.

நண்டு துண்டுகள் முழுவதுமாக நனையும் அளவிற்கு தண்ணீரின் அளவு இருக்க வேண்டும்.

பின் அதில் சர்க்கரை, அரைத்த தக்காளி விழுது, வினிகர், உப்பு மற்றும் அஜினோமோட்டோ சேர்த்து வேகவிட வேண்டும்.

சுமார் பத்து நிமிடங்கள் பிறகு, மசாலா கெட்டியாக மாறும் நேரத்தில் கார்ன் பிளார் சேர்த்து கலக்கி விட வேண்டும்.

இப்போது முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி முட்டையை நன்கு அடித்து விட்டு, அதையும் குழம்பில் சேர்த்து விட வேண்டும்.

குழம்பு கெட்டியாகும் போது அடுப்பினை ஆஃப் செய்து விட்டு இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையான ஸ்பைசியான நண்டு மசாலா ரெடி.

Related posts

Leave a Comment