கோடக் மஹேந்திரா வங்கி தங்களின் வாடிக்கையாளர்களின் முன்னுரிமையை மனதில் வைத்து, பல சேமிப்பு கணக்குகளை வழங்குகிறது. இந்த சேமிப்பு கணக்குகள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் வகையில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை ஆன்லைன் மூலம் திறக்க அனுமதிக்கிறது. ஆன்லைன் மூலம் சேமிப்பு கணக்கை தொடங்கியவுடன், கோடக் வங்கி வாடிக்கையாளர் வீட்டிற்க்கே வந்து KYC Verification யை செய்வார்., அல்லது வீடியோ கால் மூலம் KYC Verification யை செய்வார்கள்.
கோடக் மகேந்திரா வங்கி ஆனது ஆன்லைனில் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. அவற்றில் சில அடிப்படை அம்சங்களை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
ATM Card Apply செய்தல் , Credit Card Apply செய்தல், Cheque Book க்கிற்கு விண்ணப்பித்தல், Home Branch யை மாற்றுதல், சேமிப்பு கணக்கை Upgrade செய்தல், மின்னஞ்சலை மாற்றுதல், Gift Cardகளை உருவாக்குதல், கைரேகையை வைத்து Mobile Banking யை திறத்தல், ஆன்லைன் மூலம் RD மற்றும் FD கணக்கை திறத்தல், Recharge / Bill Pay, Rekyc Update செய்தல் என பல சேவைகளை வழங்கி வருகின்றது.
கோடக் வங்கியில் ஜீரோ இருப்பு சேமிப்பு கணக்கை திறக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கீழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
கணக்கை திறக்கும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
மைனர் சேமிப்பு கணக்கை தவிர, விண்ணப்பதாரர் 18 வயதை நிறைவு செய்தவராக இருக்க வேண்டும்.
ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையை வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல்.
கோடக் மகேந்திரா வங்கி – 811 டிஜிட்டல் பேங்க் அக்கவுண்ட் கோடக் மகேந்திரா வங்கியின் 811 டிஜிட்டல் பேங்க் அக்கவுண்டில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும், எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இந்த கணக்கினை ஆன்லைனிலேயே நீங்கள் தொடங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் 811 virtual debit card-யும் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங், பில் பேமென்ட்ஸ், மொபைல் அல்லது டிடிஹெச் ரீசார்ஜ் என பலவும் செய்துக் கொள்ளலாம். இந்த சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 4% வட்டியினை பெற்றுக் கொள்ளலாம்.
கோடக் வங்கியில் ஜீரோ இருப்பு சேமிப்பு கணக்கை திறக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.kotak.com/ இந்த லிங்க்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.